பக்கம்:ஆய்வுப் பேழை.pdf/133

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. கண்காள் காண்மின்களோ

கண் எடுத்த பயன்-கண்களைக் கொடுத்த இறைவனே யும், இறைவன் தங்கி அருள் புரிவதற்குரிய குறி” ஆகிய சிவலிங்கத் திருமேனியையும், அத்திருமேனி எழுந்தருளப் பெற்றுள்ள திருக்கோயிலையும் அத்திருக்கோயிலில் வழிபடும் அடியார்களே யும், அக்கோயில்களைக் கட்டிய அரசர்களது உருவங்களேக் காணுதலாகும்.

தஞ்சையில் சிவபாதசேகரன் இராசராசசோழன் சதயத் திருவிழா ஆண்டு தோறும் நடைபெறுகிறது. இவ்வரசன் எடுப்பித்த கோயிலே தஞ்சை பிரகதீசுவரர் ஆலயம் எனப்பெறும் ராஜராஜேஸ்வரம் ஆகும். அ. க் கோ யி ல் விமானம் வானளாவிக்கண்களை ஈர்க்கும் தகைமையதாக விளங்குகிறது. அவ்விமானத்தின் நி ழ லி ல் எழுந்தருளி யுள்ள பிரகதீசுவரர் மிகப்பெரிய திருமேனி. இச்சிவலிங்கத் திருமேனியை எழுந்தருள்வித்துப் பொன்னும், மணியும், மாலையும் பூட்டி அலங்கரித்து வழிபட்டவன் இராசராச சோழன்.

அவன் இக்கோயில் எடுப்பித்தபொழுது இறைபணி யாளனுக (நீகாரியம் ஆராய்பவனுக) இருந்தவன் பொய்கை நாடு கிழவன் ஆதித்தன் சூரியனை தென்னவன் மூவேந்த வேளான் என்பவனுவான்.

இவ்வலுவலன் தஞ்சைப் பெரிய கோயிலில் கி. பி. 11ஆம் நூற்ருண்டின் தொடக்கத்தில் இராசராசசோழனுடைய உருவத்தை எழுந்தருளுவித்தான். அது ஒரு முழமே நான்கு விரல் உயரமுடையது. அவனுடைய பட்டத்தரசி யாகிய ஒலோகமாதேவியார் உருவத்தையும் எழுந்தருளச் செய்தான் என்று கல்வெட்டில் உள்ளது. இந்நாளிலும் இராசராச சோழனின் உருவம் அக்கோயில் உள்ளது.