பக்கம்:ஆய்வுப் பேழை.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

127

கோயிலுக்கு .ெ வ ளி யே வீரச்சுவையை வெளிப்படுத்திக் கொண்டு இராசராசனின் உருவம் இந்நாளில் அமைக்கப் பெற்றிருப்பதும் யாவரும் அறிந்ததே.

இராசராசன் தன் மனைவி ஒலோக மாதேவியாருடன் இருக்கும் உருவம் திருவிசலூர்த் திருக்கோயில் மகாமண்டபப் புறச்சுவரில் செதுக்கப்பட்டிருப்பதை இன்றும் காணலாம் அவ்வுருவங்கள் திருக்கோயில் திருப்பணி செய்த காலத்தில் செப்பம் செய்யப்பட்டிருந்த போதிலும், பழைய உருவத்தின் நிழற்படம் கோயில் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.

இராசராசன் தேவாரத் திருமுறைகளைத் தொகுத்தவன். இங்ங்னம் தொகுப்பதற்கு இவனுக்கு உதவியவர் திருநாறை யூரில் வாழ்ந்த நம்பியாண்டார் நம்பிகள் ஆவார். திருநா றையூர் பொல்லாப்பிள்ளை யார் சன்னதியில் இராசராசனின் உருவம் வைக்கப்பட்டுள்ளது.

இராசராசனுடைய பாட்டன் அரிஞ்சயன். அரிஞ்சயனின் தமையனர் கண்டராதித்தர். இவர் தில்லைத் திருவிசைப்பாப் பாடியவர். இக்கண்டராதித்த சோழர் திரு நல்லமுடையாரை வழிபடுவதுபோல் (கோனேரிராசபுரத்துக்கோயிலில் தட்சிணு மூர்த்தி சன்னதிக்குப் பக்கத்தில்) இருத்தலேக் காணலாம்.

கண்டராதித்தருடைய மனைவி செம்பியன் மாதேவியார். அவர் சிறந்த சிவபக்தர்; பல கோயில்களுக்குச் சிறந்த திருப்பணிகள் செய்தவர். அவர் பெயரால் அமைந்ததே செம்பியன் மாதேவி என்ற ஊராகும். அன் ஆர்க் கோயிலில், செம்பியன் மாதேவியாரின் உருவச்சிலே உண்டு.

இரண்டாம் இராசராசசோழன் எடுப்பித்தது தாரா சுரத்துச் சிவன் கோயில் ஆகும். அதில் இராசராசன் 11, அவன் மனைவி ஆகிய இருவரது உருவச்சிலைகள் வைக்கப் பட்டிருந்தன. அச்சிலைகள் இற்றைஞான்று தஞ்சைக் கலைக் கூடத்தில் வைக்கப்பெற்றுள்ளன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுப்_பேழை.pdf/134&oldid=676669" இலிருந்து மீள்விக்கப்பட்டது