பக்கம்:ஆய்வுப் பேழை.pdf/135

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I28

மூன்ரும் குலோத்துங்க சோழன் திரிபுவன வீரதேவன் எனப்பெறுவான். இவன் எடுப்பித்ததே திருபுவனத்திலுள்ள கம்பகரேசுவரர் கோயிலாகும். இ க் கே.ா யி லி ல் உள்ள விமானம் மிகப்பெரியது. கோயிலின் .ே ம ல் த ள த் தி ல் விமானத்தின் அறையில் இக் குலோத்துங்க சோழனுடைய உருவமும் இவன் மனைவியின் உருவமும் அமைக்கய்பெற்று உள்ளன.

முதலாம் இராசராசனுடைய ம க ன் முதலாம் இரா சேந்திரன் பெருவீரன்; கங்கை, கடாரம் வரையிலும் படை யெடுத்தவன். அ வ ன் கங்கைகொண்ட சோழபுரத்தில் கங்கைப் படையெடுப்பின் நினைவாக வானளாவிய விமானம் உடைய அரிய கோயிலை எடுப்பித்தான். அதில் அவனு டைய உருவச்சிலை இல்லை. எனினும், சண்டீசனுக்குச் சிவ பெருமான் இண்டை மாலைசூட்டி அனுக்கிரகிப்பது போல ஒரு உ ரு வ ம் அக்கோயிலில் அமைக்கப்பட்டுள்ளது. அதனைக் கூர்ந்து நோக்குவார் சிலர், அனுக்கிரகம் பெறும் படியான உருவத்தில் சண்டீசராகிய மாணிக்கு உ ரி ய பூனுால் முதலிய நிலைகள் காணப்படாமையாலும், அவ்வுரு வம் அரசனது உருவம் போன்று காணப்படுதலினுலும், அது இராசேந்திரனுடைய உருவமாகக் கொள்ளுதற்கு இடம் தருகிறதுஎன்பர். இவ்வூகம் உண்மையாயின் இராசேந்திரனே யும் காணும்பேறு நம் ஊனக் கண்களுக்குக் கிடைக்கும்.

இதுகாறும் கூறிய அரச உருவங்கள் 11, 12 ஆம் நூற் ருண்டுகட்கு உரியவை. தேவார காலத்து-அதாவது 7 ஆம் நூற்ருண்டுக்குரிய பல்லவ அரசர்களது உருவங்கள் இந் நாளிலும் காணக்கிடப்பனவாகும்.

மகாபலிபுரம் சிறந்த கலைச் செல்வங்களை உடையது. அவற்றுள் ஒன்று ஆதிவராகர் கோயில். இதில் இரண்டு உருவச் சிலைகள் உள்ளன. திருநாவுக்கரசரை நீற்றறையில் இடல் முதலான முறைகளில் வருத்திய மகேத்திரவர்மனு டைய சிலை ஒருபுறச்சுவரில் உள்ளது. அதன் மேல்புறத்