பக்கம்:ஆய்வுப் பேழை.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

129

தில் மகேந்திர போதாதி ராசன் என்ற எழுத்துக்கள் உள்ளன. அதற்கு நேர் எதிர்ப்புறச் சுவரில் உட்கார்ந்த நிலையில் அரச உருவம் ஒன்று செதுக்கப்பெற்றுள்ளது. அதன் மேல்புறத்தில் சிம்மவிஷ்ணு போதாதி ராசன் என்று எழுதப்பெற்றுள்ளது. இவ்வுருவச்சிலை மசேந்திரவர்மனு டைய தந்தை சிம்மவிஷ்ணுவைக் குறிக்கும்.

மகேந்திரவனுடைய மகன் நரசிம்மவர்மன் எனப்படு வான். இவன் வாதாபி கொண்டவன். இவனுடைய சிலே யும் மகாபலிபுரத்துக் குகைக்கோயிலில் காணப்படுகிறது.

இங்ங்ணம் கோயில்கள் கட்டிய பல அரசர்களுடைய உருவங்கள் இன்றும் காட்சி அளித்து அவர்களுடைய தொண்டின் நினைவைப் பசுமையாக வைத்திருக்கின்றன. கண்காள்! அவ்வருவங்களைக் காண்மின்களோ!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுப்_பேழை.pdf/136&oldid=676671" இலிருந்து மீள்விக்கப்பட்டது