பக்கம்:ஆய்வுப் பேழை.pdf/137

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. கல்வெட்டுக்களும் இசையும்

'மாசில் வீணையும் மாலை மதியமும் போன்றது ஈசன் எந்தை இணையடி நீழல்’ என்றருளினுர் அப்பர்.

அப்பர் காலத்துப் பல்லவ அரசன் மகேந்திர வர்மன் அவன் தான் எழுதிய மத்தவிலாசப்பிரஹசனம் என்ற நூலில் குத்திரதாரன் வாயிலாக அஹம்து ஸம்ப்ரதி ஸங்கீத தன: -இசை எனது செல்வம் என்று கூறுகிருன். இவ்வரசன் இசைச்கலையில் வல்லுநன். இதனை விளக்கும் முறையில் இவனுக்குரிய சங்கீர்ண ஜாதி என்னும் சிறப்புப் பெயர் அமைந்துள்ளது. திருச்சியிலும் பல்லாவரத்திலும் இவன் அமைத்த குகைக்கோயில் சாஸனங்களில் சங்கீர்ண ஜாதி என்ற தொடர் காணப்படுகிறது.

தாளவகைகள் ஐந்து: அவை சதுர ஸ்ரம், திஸ்ரம் மிஸ்ரம், கண்டம், சங்கீரணம் என்பன. சங்கீரணம் என்னும் தாளத்தைப் புதிதாகக் கண்டு, அதன் வகைகளையும் ஒழுங்கு களேயும் அமைத்தவன் ஆகலின், மகேந்திரன் சங்கிiன ஜாதி என்ற சிறப்புப் பெயரைப் பெற்ருன் என்று ஆய்வாளர் கூறுவர்.

மகேந்திரனது இசையறிவைப் புலப்படுத்துவது இவனது குடுமியாமலேக்கல்வெட்டாகும். குடுமியாமலே என்பது புதுக் கோட்டை மாவட்டம் குளத்துார்த் தாலுகாவில் உள்ளது. அங்குக் குன்றின் மேல் சிகாநாதர் கோயில் என்று ஒரு குகைக் கோயில் இருக்கிறது. இக்கோயிலுக்குப் பின்புறத் தில் பாறையில் இரண்டு பிள்ளையார் உருவங்கள் செதுக்கப் பட்டுள்ளன. இருவிநாயகர்க்கு இடையில் இசைச் சாஸனம் பொறிக்கப்பெற்றுள்ளது. இது 1904-ல் கண்டு பி டி க் க ப் பெற்றது. ராவ் சாஹிப் H. கிருஷ்ணசாஸ்திரி எ டு த் த படியைக்கொண்டு, ராவ்பகதூர் P. R. பந்தர்க்கர் அவர்கள் எபிகிராபியா இந்திகா XII ஆவது தொகுதியில் விளக்க