136
இவ்வரிகளினின்று, ச்த்ருமல்லன் என்ற சிறப்புப் பெயரையுடைய மகேந்திரன் கந்தர்வ சாத்திரத்தில் வல்ல வன் என்றும், சதுர் வர்ணங்களை விதிகளுக்கு ஏற்ப அமைத்து, மனத்துள் நன்கு ஏற்று அவற்றை வாத்யத்தில் அமைத்துப் பார்த்தனன் என்றும் அறியப் பெறும்.
மகேந்திரவர்மனின் பெயரனுக்குப் பெயரனும், 7-ஆம் நூற்றண்டின் இறுதியில் வாழ்ந்தவனும், காஞ்சிபுரத்தில் கயிலாசநாதர் கோயிலை எடுப்பித்தவனும் ஆகிய இராச சிம்மன் இசையில் பேரறிவுடையவன். அவன் வாத்ய வித்யாதரன் (இசைக்கருவிகளை இசைப்பதில் விஞ்சையனைப் போன்றவன்), ஆதோத்ய தும்புரு (தும்புருவைப் போல ஆதோத்ய விணை வாசிப்பதில் வல்லவன்), வீளுநார தன் (வீணையில் நாரதன்போன்றவன்) என்று இசைப்புலமை விளக்கும் பட்டங்களைப் பூண்டவன்.
இதுகாதும் பல்லவர் காலத்து இசைச் சிறப்புக் கூறப் பட்டது. பல்லவர் காலத்துக்கு முற்பட்ட சிலப்பதிகார காலத்தது எனப்பெறும் இசைபற்றிய சாஸனம் ஒன்று அரச்ச லூர் என்றஊரில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஈரோட்டிலிருந்து காங்கேயம் செல்லும் பாதையில் பன்னிரண்டு கல்தொலைவில் அரச்சலூர் என்ற சிற்றுார் உள்ளது. அவ்வூர் எல்லையில் நாகமலை என்றமலை இருக்கிறது. அதில் ஆண்டிப்பாறை என்ற பகுதி; அதனுள் ஒர் இயற்கைக் குகை. இக்குகையில் பண்டைத் தமிழ் எழுத்துக்கள் இருத்தலைத் திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியிற் பயின்ற வரும், தமிழ் ஆசிரியராக இருப்பவரும், கல்வெட்டு ஆராய்ச் சியில் புலமை சான்றவரும் ஆன வித்துவான் திரு. இராசு கண்டார். இக்குகையில் மூன்று பண்டைத் தமிழ்க் கல் வெட்டுக்கள் உள்ளன. முதல் கல்வெட்டு ஐந்தெழுத்துக் கள் கொண்ட ஐந்து வரிகளையுடையது, அது: