18. இரண்டாம் இராசாதிராசனது
திருவொற்றியூர்க் கல்லெழுத்து
இரண்டாம் இராசாதிராசன்
இவன் இரண்டாம் இராசராச சோழனுக்குப்பின் பட்டம் எய்திய சோழவரசன்; விக்கிரமசோழனது பேரராகிய நெறியுடைப் பெருமாள் என்பவருடைய மகன்; எதிரிலிப் பெருமாள் என்பது இவனது இயற்பெயர். இரண்டாம் இராசராசன், தனக்குப்பின் பட்டம் எய்துவதற்குரிய ஆண் மக்கள் இல்லாமையின் இவ்வெதிரிலிப் பெருமாளே இளவர சாக்கின்ை. 1163-ல் இவன் முடிசூட்டப்பெற்றபொழுது இராசாதிராசன் என்று அபிஷேகப் பெயர் பெற்ருன்; 1178 வரை இவன் அரசு செலுத்தின்ை.
கல்லெழுத்து நுதலியபொருள்
இரண்டாம் இராசாதிராசன் தம் 9-ஆம் ஆட்சியாண் டில் திருவொற்றியூர்க்குச் சென்றிருந்தான். அப்பொழுது திருவொற்றியூர் இறைவற்குப் பங்குனியுத்தரப் பெருவிழா நடந்து கொண்டிருந்தது. அத்திருவிழாவின் ஆரும் திரு நாளான புதன்கிழமையும் ஏகாதசியும் பெற்ற ஆயிலியநாளில் படம்பக்கநாயகதேவர் திருமகிழின் கீழ் எழுந்தருள்விக்கப் பெற்ருர். இராசாதிராசனும் அப்பொழுது அக்காட்சியைக் காணச் சென்றனன். அங்கு அரசைேடு மடமுடைய சதுரானன பண்டிதன், மாகேசுவரக்கண்காணி திருவீதி வெயிடம்கொண்டான், ரீ காரியம் அரியபிரான் பட்டன், சோம சித்தாந்தம் வக்காணிக்கும் வாகீசுவர பண்டிதன், காலும் பிடாரும் செயங்கொண்ட சோழமண்டலப் பிடாரன், திருவொற்றியூர்ப் பிச்சன், கோயில் நாயகம் படம் பக்க