பக்கம்:ஆய்வுப் பேழை.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

143

XXI – XXVIII, XXXIV - XXXVII.1 l 13, 35É1356 figyith, @# கல்லெழுத்தைப்பற்றி எழுதி யுள்ளார்கள். அண்மையில் வெளிவந்த தென்னிந்தியக் கோயில் சாஸனங்கள் பாகம் 1-ல் 516-வது எண்ணுகவும். பாகம் II-ல் பிற்சேர்க்கை V1-ல் பக்கம் XVII-லும் இக் கல்லெழுத்துக்குரிய குறிப்புக் காணப் பெறுகிறது. இக்கல்லெழுத்து, திருவொற்றியூரில் ஆதி புரீசுவரர் கோயில் இரண்டாம்பிராகாரத்துக் கிழக்குச்சுவரில் உள்ளது.

இக்கல்லெழுத்தின் காலம்

இக்கல்லெழுத்து இரண்டாம் இராசாதிராசனுடைய 9-ஆம் ஆட்சியாண்டில் கொடுக்கப்பட்டது. இவன் பட்டம் பெற்றயாண்டு 1163; எனவே இக்கல்லெழுத்து கி. பி. 117273க்கு உரியது என்னலாம்.

சதுரானன பண்டிதன்

படம்பக்க நாயகதேவர் திருமகிழின் கீழ்த் திருவோலக்கம் செய்தருளியிருந்த சமயத்தில் போந்திருந்தவர்களுள் துரானன பண்டிதன் என்பாரும் ஒருவர். இவர் திருவொற்றி யூரிலிருந்த ஒரு மடத்தின் தலைவர் ஆகலின் மடமுடைய சதுரானன பண்டிதன் எனப்பெற்றர்.

திருவொற்றியூரில் பல மடங்கள் இருந்தன. அவற்றுள் ஒரு சைவ மடத்துக்குத் தலைவராய் இருந்தவர் நிரஞ்சன

1. இந்நூலில் இக்கல்லெழுத்துக்குரிய அரசன் இராச

ராசன் என்று காணப்பெறுகிறது; இதற்கு ஆதாரம் தரப் பெறவில்லை.

2 சதுரானன பண்டிதர் மடம் 401 of 1896 (S.I.I.V. 1356 Same as 130 of 1912), 405 of 1896 (S.I.I.V 1360 Same a 206 of 1912), 177 of 1912, 181 of 1912, 399 of 1896 (S. I.I. V 1354 Same as 104 of 1912), 105 of 1892 (S. I. I. IV 553 Same as 126 of 1912; செல்வத்திருவாரூர் கீழைமடம்) S. I. T.I. vol I 524; 360 uplot th207 of 1912. S. I. T. I. vol

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுப்_பேழை.pdf/150&oldid=676685" இலிருந்து மீள்விக்கப்பட்டது