பக்கம்:ஆய்வுப் பேழை.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144

தேவர் எனப்பெற்றர். பல்லவ அரசனை மூன்ரும் நந்திவர் மனின் (கி. பி. 825-50) மகளுன கோ விசய கம்பவர்மனின் 19-ஆவது ஆட்சியாண்டில் இந் நிரஞ்சன தேவர் திரு வொற்றியூரில் சிவன் கோயில் ஒன்றை எடுப்பித்தார்; அதற்கு நிரஞ்சனதேவேச்சரம் எனப்பெயரிட்டார்.3

இந்நிரஞ்சன தேவர்க்குப்பின் மடத்து அதிபராய் வந்த வருள் ஒருவர் சதுரானன பண்டிதர் என்ற பெயருடையவர்: இவர் முதற்பராந்தக சோழனது (907 - 953) இறுதிக்காலத் தில் இருந்தவர். இவர் கேரள நாட்டினர்; இராட்டிரகூட அரசகிைய மூன்ரும் கிருஷ்ணனுக்கு மிகவும் வேண்டியவர்; இளமையில் பல கலைகளே நன்கு கற்ருர்; பின் சோழ நாட்டிற்குப்போந்து முதற் பராந்தகனுடைய மகளுகிய இராசாதித்தனுக்கு உற்ற நண்பரானர்; அவ்விராசாதித் தற்குக் குருவாகவும் சாமந்தராகவும் இருந்தார்; எனினும் இராசாதித்தன் போரில் இறந்த பொழுது உடன் இறக்க முடியாதவரானர். இதல்ை இவர் மனம் நொந்து, உலக வாழ்வை வெறுத்தார்; கங்கை நீராடினர்; ஆதிக்கிராமத்தில் (திருவெற்றியூரில்) இருந்த நிரஞ்சன குருவிடம் விரதம் (துறவு) பூண்டு மாவிரதியானர் ; நிரஞ்சன தேவர்க்குப் பின் இச்சதுரானன பண்டிதர் மடத்து அதிபதியாளுர். இராசாதித்தனிடம் சேனுபதியாக இருந்த கேரளன் வெள்ளங்குமரனே தக்கோலத்துப் போருக்குப் பிறகு துறவி யார்ைஎன்று ஒருசாரார் கூறுவர். மேலே குறிப்பிட்ட மூன்ரும் கிருஷ்ணகிைய கன்னர தேவனது 20-ஆவது ஆண்டுக்

I No. 508; Q&t-to-Egir int-th 203 of 1912 S.I.T.I. vol I 522; பிக்ஷா மடம் 212 of 1912 S. 1. T. I wo11 525; ராஜேந்திர் சோழன் மடம் 107 of 1892 S.H.I. vol IV 555; குலோத்துங்க சோழன் மடம் 200 of 1912; திருஞானசம்பந்தர் மடம் 238 of 1912; நந்திகேசுர மடம் 239 of 1912.

3. 372 of 1911; S. I. I. vol XII No. 105.

4. 181 of 1912; மூன்ரும் கிருஷ்ணனுடைய 20-ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுப்_பேழை.pdf/151&oldid=676686" இலிருந்து மீள்விக்கப்பட்டது