பக்கம்:ஆய்வுப் பேழை.pdf/152

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

145

கல்லெழுத்து (கி.பி. 960) நூறுநிஷ்காக பொன் கோயிலில் பலிக்காகத் தந்ததைக் கூறுகிறது. தான் பிறந்தநாளாகிய தனிஷ்டா (கேட்டை) நாளில் சிறப்பாக வழிபாடு நடத்து தற்பொருட்டு இத் தருமம் அளிக்கப்பெற்றது. ம | ன் ய கேதத்தில் இருந்த வியாபாரி ஒருவன் மூன்ரும் கிருஷ்ணன் உடைய காடகத்துள்ளவன்; நஞ் சிப்பையன் என்ற பெயரி னன்; திருவொற்றியூர் இறைவர்முன் ஒரு நந்தாவிளக்கு எரிக்க 30 ஊர்காற் செம்மைப்பொன் 6 சேற்றுப்பேட்டு 1 ஊரவரிடம் கொடுத்தான். இச் சதுரானன் பண்டிதர் கிருஷ்ணனுடைய 19-ஆவது ஆ ட் சி ய | ண் டி ல் இத் தருமத்தை தடத்த ஏற்றுக்கொண்டார்.8

இனி முதல் இராசேந்திரன் (1012 - 1041) காலத்திலும் சதுரானன பண்டிதர் என்று ஒருவர் இருந்தார். இவர் திரு வொற்றியூர்த் திருமயானமும் மடமும் உடைய சதுரானன பண்டிதர் எனப்பெற்றர்.சி முதலாம் இராசேந்திரனுடைய 31-ஆம் ஆட்சியாண்டில் உடையார் யூரீ இராசேந்திர தேவர் திருநாள், மார்கழித்திருவாதிரைத்திருநாளன்று திருவொற் றியூரிறைவன் நெய்யாடியருளுவதற்கு 150காசு இச்சதுரானன பண்டிதர் நிபந்தம் கொடுத்தார். காசுக்கு ஒரு பசு விதம் 100 பசுக்கள் வாங்கிப் பல:மன்ருடிகளிடம் கொடுக்கப்

5. நிஷ்கா ஒரு கழஞ்சுக்குச் சமானமானது (S. i. 1. HI 104).

6. ஊர்காற் செம்மைப்பொன்-உருகாச்செம்பொன்-செம் பொற்கட்டி: ஊர்ப்பொதுவாக உள்ள நிறைக்கும், உரைகல் 1et 450);<i, Gylb & intnr6orgy: (P. 1406 of S. I. £. I. vol. III Part Ii).

7. சேற்றுப்பேடு-சென்னே எழும்பூர் இரயில் நிலையத் துக்கு இப்பால் உள்ள இரயில் நிலையம் உள்ள ஊர்.

8, 177 of 1912; A. R. E.; 1913 is 17; K. A. N. Cholas voi II Pages 496–7. o

9 104 of 1912; 399 of 1896 S. 1. I. V 1354. 10 முதலாம் இராசேந்திரன் மார்கழித் திருவாதிரை நாளில் பிறந்தவன். (திரு. பண்டாரத்தார் - பிற்காலக் சோழர் சரித்திரம் பாகம் பக்கம் 139.)

மன்ருடிகள்-ஆட்டிடையர்.