பக்கம்:ஆய்வுப் பேழை.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146

பெற்றன. ஆண்டாண்டுதோறும் பசுவொன்றினுக்கு அரு மொழிதேவன் 12 நாழியால் முந்நாழி நெய்யாக முந்நூறு நாழிநெய் மார்கழித்திருவா திரை நாளில் தேவர்பண்டாரத்தே அளப்பதாக ஒப்புக்கொண்டனர்: முதலாம் இராசேந்திர சோழன் காலத்தில் திருவொற்றியூர்த் திருக்கோயில் பூரீ விமானம் அருமையான கரிய கல்லினுல் கட்டப்பெற்றது; அதனை ரவி என்னும் வரவிர சோழதகஷன் என்பவன் கட்டின்ை; விமானம் மூன்று தளங்களால் ஆனது; இச் சதுரானன பண்டிதருடைய துாண்டுதலினுல் இத்திருப்பணி செய்யப்பெற்றது.13

முதற்குலோத்துங்கசோழன் (1070 - 1118) காலத்தில் இன்னும் ஒரு சதுரானன பண்டிதரைப்பற்றிக் கேள்விப்படு கிருேம். இச்சோழனது 7ஆம்ஆட்சியாண்டு 290ஆவதுநாளில் அதிகாரிகளில் குளமுழார் ஏறன் கூத்தனுரான ராசராச மூவேந்த வேளார், திருவோற்றியூர்க்கோயிலில் ராசராசன் மண்டபத்தில் கோயில் கருமம் ஆராயவிருந்து திருவொற்றி யூர்க் கோயிலுக்குரிய தேவதான ஊர்களின் கணக்குக&ளப் பரிசீலனே செய்து 125 காசு கோயிலுக்கு வரவேண்டும் என்பதைக் கண்டறிந்தார். க் இத்தொகையை வீரராஜேந் திரன் திருப்பள்ளி யெழுச்சிக்குவேண்டும் நிபந்தங்களுக்கு நிபந்தம் செய்துகொடுக்க என்று உத்தரவிட்டார்; புரவுவரித் திணைக் களத்துக் கணக்கு 15 பாலையூர் கிழவன் கம்பன் சீலமையனும், சீராளான் கண்டராச்சனும், மடமுடைய சதுரானன பண்டிதனும் இருந்து நிபந்தம் செய்தார்கள்.

12 அருமொழி தேவன் நாழி-முதல் ராசராசன் பெயரால் வழங்கிய நாழி.

13 105 of 1892, S. I. !. IV 553; 126 of {912.

14 இந்ந ாளில் கோயிற் Յ5 ՃԾնI க்குகளே, அரசியலா 1 நியமிக்கும் கணக்குப்பரிசோதகர், பரிசீலனே செய்தலே இங், ஒப்பிட்டு நோக்குக.

15 புரவு வரித்தினேக் களம் - அரசாங்கத்து வரிக் கனக்கு வைத்திருக்கும் குழு.

16 401 of 1896, S. I. I. V 1356; 130 of 1912.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுப்_பேழை.pdf/153&oldid=676688" இலிருந்து மீள்விக்கப்பட்டது