பக்கம்:ஆய்வுப் பேழை.pdf/156

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

149

ன்ற பெயரால் ஒரு சாத்திர நூலே எழுதினர். இந்நூலை நிதியமையால் இவர் ஞானுமிருதாசாரியர் என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்பெற்ருர்.

இனி இவர் திருநெல்வேலி மாவட்டத்துச் சென்று திரு வாலிச்சரம் என்ற ஊரில் இருந்த கோளகி மடத்துத்தலே வராய் இருந்தார் என்றும், இவருக்குப்பின் திருவாலிச்சர மடத்தினர் தம்மை ஞானமிருதாசாரியார் சந்தானம் என்று கூறிக்கொண்டனர் என்றும் ஆராய்ச்சியாளர் கூறுவர் 24. திருஞானம்: விண்ணப்பிப்பதற்குச் சிவப் பிராமண்ர் எண்மர் கோளகி மடத்து ஞானமிர்தாசாரிய சந்தானத்தைச் சார்ந்த புகலிப்பெருமாள் என்பாருடன் உடன்படிக்கை செய்துகொண்டனர் என்று ஜடாவர்மன் திருபுவனச் பக்கரவர்த்தி வீரபாண்டிய தேவனது 3ஆம் ஆட்சியாண்டுக் கல்லெழுத்திலும் 26, கோளகி மடத்து ஞாளுமிர்தாசாரிய சந்தானத்தவரான அகோர தேவர் என்று இன்ளுெரு கல்லெழுத்திலும் ஞானமிர்தாசாரிய சந்தானம் என்று ஒரு

களால் சிவஞானபோத உரையிலும், சிவஞானசித்தியார் உரைகளிலும், சிவப்பிரகாச உரையிலும் எடுத்தாளப்பெற்று உள்ளது; பதி பசுபாச வியல்புகளைத் தெளிவுற இயம்புவது; ஞான முதலிய நான்கு பாதங்களையும் தெரிவிப்பது; இந் நூற்கு அரியதோருரையுண்டு. இந்நூலைத் திரு. ஒளவை. சு. துரைசாமிப்பிள்ளை அவர்களேக் கொண்டு பரிசோதித்து, அண்மைலைப் பல்கலைக் கழகத்தாரால் திருப்பனந்தாள் பரீ காசிமடத்து அதிபர் நீலது காசிவாசி சாமிநாத சுவாமி கள் அவர்கள் நிறுவிய ரீ ராஜராஜ அபய குலசேகர சோழ மகாராஜா நினைவுத் தேவாரத் திருமுறைப் பரிசு தமிழ்நூல் வெளியீடு என்னும் அறக்கட்டளையின் கீழ் வெளியிடப் பெற்றுள்ளது.

24 மு. ரா. சாஸன்த்தமிழ்க்கவி சரிதம் பக்கம் 79; ஞானுமிர்தம் முன்னுரை பக்கம் XXV.

25 திருஞானம் - தேவாரம், 26 359 of 1916 27 361 of 1916,