பக்கம்:ஆய்வுப் பேழை.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

155



பிபாகானத்தில் 4 திருக்கரங்களுடன் அமைந்த திருமேனியைப் படம்பக்கநாதர் என்று சமயநெறிமுறைகள் நன் கபந்த பெருமக்கள் அக்காலத்துக் கல்லெழுத்துக்களில் . பனம் குறித்தனர் என்று தெரியகிற்றிலது.

கோயிலதிகாரிகளும் பிறரும்

ஆளுடைய நம்பி ஸ்ரீபுராணம் கேட்டவர்களுள் இராசாதிராசனும் சதுரானன பண்டிதனும், வாகீசுவர பண்டிதனும் ஆவர் என்று கண்டோம்; இவர்களோடு ஸ்ரீ மாகேசுவரக் கண்காணி திருவீதி வெளியிடங்கொண்டான் என்றவரும் அங்கு இருந்தார். மாகேசுவரர் என்றது சிவனடியார் என்பது. "கோயில் நிர்வாகத்தில் பொறுப்புள்ள சிவனடியார் சபை” யின் மேற்பார்வையாளர் மாகேசுவரக் கண்காணி எனப்பெறுவர். அங்கு இருந்தவர்களில் இன்னொருவர் செயங்கொண்ட சோழ மண்டலப் பிடாரன் [1] என்பவர் ஆவர். பிடாரன் என்பது திருக்கோயில்களுள் திருப்பதிகம் விண்ணப்பிப்பவரை (தேவாரம் ஒதுபவரை)க் குறிக்கும். இன்னொருவர் கோயில் நாயகம் படம்பக்கநாயகபட்டர் என்பவர். இப்பெயர் படப் பக்கநாயகர் திருப்பெயரைக்கொண்டவர் என்றோ படம்பக்கநாயகரைப் பூசை செய்யும் உரிமை பெற்ற சிவாசாரியர் என்றே பொருள்படும். இவர் கோயில் நாயகம் என்ற அலுவலே மேற்கொண்டவர்; பூசகர்களுள் இவர் தலைவர்போலும். இந்நிகழ்ச்சிக்காலத்தில் ஸ்ரீகாரியம் ஆராய்கின்ற அலுவலில் இருந்தவன் அரிய பிரான்பட்டன் என்பவன் ஆவன்; பூநீகாரியம் என்றது கோயில் காரியம் என்பதாம்


  1. 40. தொண்டைமண்டலம் முதல் இரசராசன் கால முதல் செயங்கொண்ட சோழமண்டலம் எனப்பெற்றது,
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுப்_பேழை.pdf/162&oldid=1387930" இலிருந்து மீள்விக்கப்பட்டது