பக்கம்:ஆய்வுப் பேழை.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2. எத்து நூல் எண்பது லக்ஷம்

முன்னுரை

“எத்துநூல் எண்பது லக்ஷம்’ என்பது ஒரே வரியான் அமைந்த ஒரு கல்வெட்டு. இது கங்கை கொண்ட சோழ புரத்துக் கோபுர வாசலுக்குத் தென்புறம் காட்டிலே கல்துாணிலே இருந்த எழுத்து’’ எனத் தென்னிந்திய கோயிற் சாஸனங்கள், பாகம் II, பக்கம் 644-5ல்,677-ஆவது சாஸ்ன மாக வெளியிடப் பெற்றுள்ளது.

செவி வழிச் செய்தி

மேற்குறித்த ஒரு வரிச் சாஸனத்தைக் குறித்து ஷெ நூலில் எழுதப் பெற்றுள்ள செவிவழிச் செய்தி பின்வருமாறு:-

கங்கை கொண்ட சோழபுரத்துத் திருக்கோயில் முதல் இராசேந்திரன் என்னும் சோழவரசனால் கட்டப் பெற்றது என்பதை யாவரும் அறிவர். தனது கங்கா விஜயத்தையும், வடநாட்டில் தான் பெற்ற வெற்றியையும் நினைவுகூர்தற்பொருட்டுத் தான் வென்று கொண்டு வந்த பெரும் பொருட்குவியலைக் கொண்டு இக்திருக்கோயிலை இவ்வரசன் கட்டினான். இக் கோயிலக் கட்டிக் கடவுண்மங்கலம் செய்த பின், ஒருநாள், ‘இக்கோயிலைக் கட்ட எவ்வளவு பொருள் செலவாயிற்று’ என்று அரசன் அறிய விழைந்தான். இக்கோயில் திருப்பணியிலே முழுமையும் ஈடுபட்டிருந்த பெருஞ் சிவபக்தனாகிய அமைச்சன் கோயில் எடுப்பிப்பதில் முழுக் கவனஞ் செலுத்தினானே யன்றிக் கணக்கைக் குறித்துக் கொள்ளவில்லை. ‘அரசனுக்கு என்னவிடை தருவது’ என்று அறியாது திகைத்த அமைச்சன் இறைவனிடம் முறையிட்டான். மறுநாட்காலை தந்தி முகத்து எந்தையாகிய விநாயகர் ஒரு கணக்குப்பிள்ளை போலப் போந்து, கணக்குக் கட்டுகளோடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுப்_பேழை.pdf/19&oldid=980538" இலிருந்து மீள்விக்கப்பட்டது