பக்கம்:ஆய்வுப் பேழை.pdf/20

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
13

அரசன் திருமுன் நின்றார். ‘கணக்கைப்படிக்கலாம்’ என்றனன் அரசன். “எத்துநூல் எண்பது லக்ஷம்” என்று படித்து நிறுத்தி அரசனைப்பார்த்தார் புதிய கணக்கர். அரசன் சிறிது சிந்தனையில் ஆழ்ந்திருந்து கணக்கில் மனநிறைவு கொண்டவனாய், அக் கணக்கரைப் போகுமாறு உத்தரவளித்தான்.

எற்று நூல் எண்பது லக்ஷம்

திருமணம் முதலிய மங்கலச் செயல்களுக்குத் திட்டம் அமைக்குங்கால் “மஞ்சட் குங்குமம் ஒரு அணா” என்று எழுதும் பழக்கம் இன்னும் சிலரிடையுள்ளது. பெருங்கோயில் எடுக்குங்கால் மேற்குறித்தவற்றின் இடத்தை எத்து நூல்-எற்று நூல் கொள்கின்றது. பெரும் பாறைகளை வேண்டியவாறு உடைப்பதற்கு எற்று நூலால் கோடு அமைத்துக் கொள்வர். இவ் வெற்று நூற் செலவு எண்பது லக்ஷம் ஆயிற்று என்றால், இக் கோயில் கட்டுவதற்குக் கணக்கில் அடங்காப் பெருந்தொகை ஆகியிருத்தல் கூடும் என்பதை அரசன் அறிந்தான் போலும்!

கணக்கு விநாயகர்

இது கட்டுக் கதையாகவும் இருந்தல் கூடும்! எனினு. இக் கதைக்கு அடிப்படையாக அமைந்ததே இக் கல்லெ ழுத்து. கங்கை கொண்ட சோழபுரத்துக் கோயிலுக்கு மேற்கே அரை கி. மீ. தொலைவில் கணக்கு விநாயகர் கோயில் என்ற பெயரில் ஒரு கோயில் இருப்பது இக் கதைக்கு உதவியாக இருக்கிறது.

பிற சிறு கல்லெழுத்துக்கள்

கங்கையில் இட்டது சிங்கக் கிணற்றினில்!

வாரணாசியில் ஒரு எலுமிச்சம்பழம் கங்கை கொண்ட சோழபுரத்துக் கோயிலின் உள்ளே இருக்கும் சிங்கமுகக்