பக்கம்:ஆய்வுப் பேழை.pdf/29

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4. மனுசரிதக் கல்லெழுத்து


சுவஸ்தி ஸ்ரீ பூமாலை இடைந்து பொன்மாலே திகழப் பாமாலை மலிந்த பருமணித்திரள்புயத் திருநிலமடந்தையொடு ஜயமகளிருப்ப - வேதமும் மெய்மையும் ஆதியுகம்போலத் தலைத்தலை சிறப்ப வந்தருளி வெலற்கரும் போர்புல ஆணை பார்த்திபர் சூட மண்முழுதுங்களிப்ப மநுநெறி வளர்த்து தன் கோயில் கொற்ற வாயிற்புறத்துமணி நாவொடுங்க - திரிபுவன முடையாளிவன் திருவுளத்தருள் முழுதுடையாளென உடனிருப்பச் செம்பொன் வீரசிம்மாசனத்துக் கோக்கிழானடிகளோடும் எழுந்தருளிய கோப்பரகேசரிவர்மனான திரிபுவன சக்கரவர்த்திகள் ஸ்ரீ விக்கிரமசோழ தேவர்க்கு யாண்டு ஐஞ்சாவது மிதுன ஞாயிற்று பூர்வபட்சத்து சப்தமியும் ஞாயிற்றுக் கிழமையும் அத்தமுமான நாள் 340 கெயாமாணிக்க வளநாட்டுத் திருவாரூர்க் கூற்றத்துத் திருவாரூர் உடையார் வீதிவிடங்கர் சித்திரைத்திங்கள் திருநாளில் சதைய......... திருக் காவணத்தில் சிம்மாசனத்து எழுந்தருளியிருந்து பதியிலாளர் தியாகவிநோத்......... கண்டருளாநிற்ப ஸ்ரீ காரியம் சுப்பிரமங்கல முடையான் மாதவன் இரவியான மானாலைய மூவேந்த வேளார் விண்ணப்பத்தினுல் பதிபாத மூலபட்டுடை பஞ்சாசாரிய தேவகன்மிகளுக்கும் கோயிலங்......... பார்க்கும் திருவாய் மொழிந்தருளியபடி நம் ஏவலால் பூலோக ராஜ்யம் செய்கிற சூர்யபுத்திரன் மநு தன் புத்திரன் ஏறிவருகிற தேரில் பசுவின் கன்றகப்பட்டு பிரமாதப்பட அதின்மாதாவான சுரபி கண்டு துக்கித்து, மநுவின் வாசலில் மணியையெறிய, அது கேட்டு, மநு தன் மந்திரி இங்கனாட்டுப் பாலையூருடையான் உபயகுலாமலனைப் பார்த்து நீ சென்று இதனே அறிந்து... வாயிற்புறத்து ஒரு பசு மணி எறியா நின்றது என்று சொல்ல, அதுகேட்டு, மநு புறப்பட்டு; பசுவையும் பட்டுக்கிடந்த...... படி வினவி தன் புத்திரன் பிரியவிருத்தனைத் தேரிலே ஊர்ந்து, குறுக்கவென்று உபய குலாமனுக்குச் சொல்ல அவன் சந்தா