பக்கம்:ஆய்வுப் பேழை.pdf/31

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
24


ஆ. ரா ய் ச் சிக் கு றி ப் பு

பண்டை நூல் கூற்றுக்கள்

பெரியபுராணத்தில் மனுசரிதம் திருவாரூர்ச் சிறப்பு என்ற பகுதியில் விரிவாகக் கூறப்பெற்றுள்ளது. இவ்வரலாறு,

'வாயிற் கடைமணி நடுநா நடுங்க

ஆவின் கடைமணி யுகுநீர் நெஞ்சுசுடத் தான் தை அரும்பெறற் புதல்வனே ஆழியின் மடித்தோன்' என்று சிலப்பதிகாரத்திலும்,

'மகனே முறை செய்த மன்னவன்” என்று மணிமேகலையிலும்,

மேலேக் கறவைக் கன்றுார்ந்தா இனத்

தந்தையு மூர்ந்தான் ’’ என்று பழமொழியிலும் குறிக்கப்பெற்றுள்ளது.

மகாவம்சம் கூறுவது

கி. மு. இரண்டாம் நூற்றண்டின் இடைப்பகுதியில் சோழ நாட்டில் ஏழாரன் என்னும் அரசன் இருந்தான். அவன் பகைவர்க்கும் நண்பர்க்கும் ஒரே நிலையில் நீதி வழங்கிளுன்; தன் மகன் தேர் ஊர்ந்து சென்று அறியாது பசுக்கன்றைக் கொன்றதற்காக, அத்தனி மகனைக் கிடத்தி, அவன்மீது தானே ஊர்ந்து கொன்ற உத்தமன். இவ்வரசன் அக் காலத்தில் இலங்கையை ஆண்ட அசேலன் என்பவஜன. வென்ருன் என்றும் மகாவம்சத்தினின்று அறிகின்ருேம். இலங்கை வரலாற்றைக் கூறும் நூலாகிய மகா வம்சத்தில் இச்செய்தி கூறப்படுவது அறியத்தக்கது.1

சோழர் வரலாறு - Dr. மா. இராசமாணிக்கம் - முதற் பாகம் - பக்கம் 40