பக்கம்:ஆய்வுப் பேழை.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
27


கத்வல் பட்டயம்: குறிப்பு

முதல் விக்கிரமாதித்தன் உரகபுரத்தில் இருந்த காலத் தில் கொடுக்கப் பெற்றவையே கத்வல் பட்டயங்கள். இவை மூன்று செப்பேடுகள் கொண்டவை; விளிம்புகள் சிறிது உயர்ந்தவை; நீளம் 9 அங்குலம்; அகலம் நடுப்பகுதியில் 4:’’; இரண்டு முனைப்பகுதிகளும் 4i’’. இம்மூன்று. செப்பேடு களும் ஐ’ கனமுள்ள 3 வளையத்தில் கோக்கப்பட்டவை. வளையத்தின் முனைகள் ஒரு அங்குலம் விட்டமுள்ள முத்திரை யுடைய செம்பினுல் பிணிக்கப்பட்டுள்ளன. அம் முத்திர்ை பன்றி ஒடுவது போன்ற உருவத்தைத் தன்னகத்தே கொண் டது. முதல் ஏட்டிலும் இறுதி ஏட்டிலும் உட்புறத்தில் எழு தப்பட்டுள்ளன. இச் செப்பேடுகளின் எடை 160 தோலா,

கிடைத்தமையும் ஆய்வும்

இச் செப்பேடுகள் ஒரு பள்ளி மாணவரிடம் இருந்தன. இவை ஐதராபாத் பகுதியில் கத்வல் என்ற அவன் ஊரில் அவன் வீட்டில் இருந்தன; வயல்களிலிருந்து இவை கிடைக் கப்பெற்றனவாம். இவற்றைக் கர்நூல் கலெக்டர் வழியாகப் பெற்று, ராவ்பகதூர் திரு. வெங்கையா அவர்கள் படியெடுத் துக் கொடுக்கப், பேராசிரியர் E. Hultzsch Ph. D. அவர்கள் GJĮp;#545 Typ 1909–5b esthitish 51 Epigraphia Indica Volume X6io பக்கம் 100-106ல் ஆய்வுரையும் ஆங்கில மொழி பெயர்ப்பும் தந்துள்ளனர். உல்ஷ் துரை எழுதிய ஆய்வுரையை ஒட் டியே இங்கு எழுதப் பெறுகின்றது. இச் செப்பேடுகளில் கண்ட மொழி சமஸ்கிருதம் - செய்யுளும் வசனமுமாம்.

ஆங்கில வழி தமிழாக்கம்

(வரி 1) ஓம் ஸ்வஸ்தி (செய்யுள் 1) (வராகாவதாரத் தோத்திரப்பாடல்).

(வரி 5) அசுவமேதம் செய்தவனும் சளுக்கிய மரபினே அணி செய்தவனும் ஆகிய புலகேசி வல்லப மகாராஜனுக்குப் ப்ரபவுத்திரனும், -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுப்_பேழை.pdf/34&oldid=980705" இலிருந்து மீள்விக்கப்பட்டது