பக்கம்:ஆய்வுப் பேழை.pdf/35

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28


(வரி 6) வனவாசி முதலாகிய பகை மன்னருடைய நாடுகளைத் தன் பராக்கிரமத்தால் வென்று, தன் புகழ் நிறுவிய கீர்த்திவர்ம பிருதிவி வல்லப மகாராஜற்குப்பேரனும்,

(வரி 8) வடபுலத்துக்குத் தலைவனாகிய புகழ் பொருந்திய ஹர்ஷவர்த்தனரை வென்று பரமேசுவரன் என்ற விருது பூண்ட சத்யாச்ரய ஸ்ரீ பிருதிவி வல்லவ மகாராஜாதிராஜ பரமேசுவரற்கு அன்பு மகனும் ஆகத் திகழ்ந்தவன்.

(வரி 10) இவன் பிறர் உதவியின்றிச், சித்திரகண்ட என்ற தன் குதிரையின் மேலேறிப், பகை மன்னருடைய இரத்தத்தைப் பருகுவதற்குரிய நாக்குப் போலத் திகழ்ந்த கூரிய ஒளி பொருந்திய வாளை, ஆதிசேடன் போல் உலகப்பொறை தாங்கும் தன் புயங்களில் ஏந்திப் பல போர்களை நடத்திப் பல அரசர்களை வென்றவன்; விழுப்புண் பலவும் பெற்றவன்; மூவரால் தான் பெறமுடியாது போகவிருந்த அரசுரிமையைத் தனக்குரியதாக ஆக்கிக்கொண்டு, நாட்டைப் பாதுகாக்கும் பொறுப்பைத் தானே ஏற்றுக்கொண்டவன். பிராம்மணர் களுக்கும் கோயில்களுக்கும் முன்னர் உரியனவாய்ப் பின் மூவர் நாடுகளில் அடங்கிய சொத்துக்களை மீண்டும் பிராமணர்களுக்கும் கோயில்களுக்கும் உரியனவாகுமாறு உத்தர விட்டவன்.

(செய்யுள் 2) (இவன் யார் எனின், இவன்) அநிவாரித விக்ரமாதித்யன்; பல பகுதிகளிலுள்ள பகை மன்னர்களுடன் போரிட்டுத் தன் வமிசத்தாருக்குரியனவாகிய அரசுரிமையை மீட்டுக்கொண்டு, பரமேசுவரன் என்ற விருதினைப் பூண்டவன்.

(வரி 17) அன்றியும்,

(செய்யுள் 3) ஸ்ரீ வல்லபன் நரசிம்பனுடைய பெருமையை அழித்தான்; மகேந்திரனுடைய வல்லமையை மறையச் செய்தான்; ஈசுவரனைத் தந்திரத்தால் அடக்கினான்.