பக்கம்:ஆய்வுப் பேழை.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

29


(செய்யுள் 4) இவன் தென்னாடு என்னும் கன்னிப் பெண்ணை அவளுடைய ஒட்டியாணம் எனத் திகழும் காஞ்சியைக் கைப்பற்றி வலிதில் மணக்க முயன்று அவட்குக் கட்டில்(?) ஆகத் திகழ்ந்த பல்லவரை நசுக்கினான்.

(செய்யுள் 5) ரணரசிகனாகிய இவன் வலிமை பொருந்திய சிறந்த தோள்களையுடையவனாய், மகாமல்லனுடைய வமிசத்தை அழித்து ராஜமல்லன் என்ற விருது பொருத்தமாகப் பூண்டான்.

(செய்யுள் 6) இவன் ஈசுவர போதராஜாவை (போத்த ரசனை) வென்று, ஏறமுடியாத மதில்களை ஏறித், தகர்க்க முடியாத மதில்களைத் தகர்த்துக், கடக்க முடியாததும் ஆழமானதுமான அகழியைக் கடந்து, தென்னாட்டின் ஒட்டி யாணமாகத் திகழ்ந்த காஞ்சியைக் கைப்பற்றினான்.

(வரி 22) உலக வலய முழுவதையும் தன் போராற்றலால் வென்றவனாகிய இந்த விக்ரமாதித்ய சத்யாச்ரய ஸ்ரீ ப்ரிதிவி வல்லய மகாராஜாதிராஜ பரமேசுவரன் எல்லா மக்கட்கும் உத்தரவிடுவதாவது:

(வரி 23) நீங்கள் அறிவீராகுக: சகரயாண்டு 596க்கு மேற் செல்லா நின்ற நம்முடைய வருஷவர்த்தனம் யாண்டு இருபதாவது நிகழுங்கால், நம்முடைய வெல்படையானது சோளிக விஷயத்தில் புகுந்து, காவிரித் தென்கரையில் உரகபுரத்தில் பாடிவீடு கொண்டு தங்கி இருக்கையில், வைசாக நிறைமதி நாளில் செடுல்லி என்ற ஊரில் அரச அளவுப்படி 50 நிவர்த்தனம் பரப்புள்ள வயலும், ஒரு கண்டுக நெல்லும், கங்கமஹாதேவி யின் வேண்டுகோட்படி, காப்பிய கோத்திரத்தவனும் ஈசுவர ஷடங்கவித் என்பவரின் பேரனும் சுவாமி சந்தசர்மனின் மகனும் ஆன கன்ஹசர்மனுக்கு நம்மாலளிக்கப்பெற்றது.

(வரி 28) அவ்வூரிலேயே வத்ஸ கோத்திரத்தவனும் மஹி ஸரஸ்வாமின் என்பவரது பௌத்திரனும், தாதம்ம

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுப்_பேழை.pdf/36&oldid=1388435" இலிருந்து மீள்விக்கப்பட்டது