பக்கம்:ஆய்வுப் பேழை.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30


ஸ்வாமின் என்பாரது புத்திரனும் ஆன பாதர் மஸ்வாமின் என்பாருக்கு அரசாங்க அளவின்படி 50 நிவர்த்தனம் பரப்புள்ள வயல் அளிக்கப் பெற்றது.

(வரி 30) அவ்வூரிலேயே 50 நிவர்த்தனம் பரப்புள்ள வயலும் ஒரு சலகெ நெல்லும் கொன்ன சர்மனுக்குக் கொடுக்கப் பெற்றது.

(வரி 31) உலக வாழ்வும் அரசபோகமும் பிறவும் மின்னொளிபோல் நிலையற்றது என்பதைக் குறிக்கொண்டு சந்திரனும் சூரியனும் பூமியும் கடலும் உள்ளளவும் நம்மரச வமிசத்தவரும் பிறரும் தம்புகழை நிலை பெறுத்தற்பொருட்டுத் தம் மறங்களினின்று இதனை வேறுபடுத்தாது இக் கொடையையும் காக்கக் கடவர்.

(வரி 33) வேதம்துறை செய்தானாகிய வியாசர் சொல்லுகிறார். (செ. 7-9)

(செய்யுள் 10) சளுக்கிய வமிசத்தில் பிறந்தவன், பல்லவ மரபினை அழித்தவன், பகைவர்களை அலைப்பவன், உத்தரவுகளுக்கு எவராலும் எதிர்ப்பில்லாதவன் - அளித்தது இச்சாஸனம்.

(வரி 37) மஹாஸந்தி விக்ரஹிக ஜயஸேநனால் இச்சாஸனம் எழுதப்பெற்றது.

(வரி 38 ஆஜ்ஞப்தியாகிய குந்தஸ்வாமினுக்கு அரசனால் இச்சாஸனம் தரப்பெற்றது. ஓம் நமோ நம : நமஸ்ஸகலவிதே!

அறியும் செய்திகள்

விக்கிரமாதித்தன், புலகேசியின் பிரபவுத்திரன்; கீர்த்திவர்மனின் பேரன்; சத்யாச்ரயனுக்கு (இரண்டாம்புலகேசிக்கு) மகன். இச்சத்யாச்ரயன் ஹர்ஷவர்த்தனனைத் தோற்கடித்தவன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுப்_பேழை.pdf/37&oldid=1388438" இலிருந்து மீள்விக்கப்பட்டது