பக்கம்:ஆய்வுப் பேழை.pdf/38

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

31


'சித்திர கண்ட' என்பது விக்கிரமாதித்தனுடைய குதிரையின் பெயர்.

விக்கிரமாதித்தனுக்கு அநிவாரித, ஸ்ரீ வல்லப, ரணரசிகர ராஜமல்ல என்ற விருதுப் பெயர்களுண்டு.

விக்கிரமாதித்தன் பல்லவ அரசர்களாகிய முதலாம் நரசிம்மவர்வன், இரண்டாம் மகேந்திரவர்மன், பரமேசுவரவர்மன் ஆகியோரை வென்றவன். காஞ்சிபுரம் தக்ஷண திசைக்குக் காஞ்சி எனும் அணிகலம் (ஒட்டியாணம்) போன்றது; அதன் மதில் ஏறமுடியாதது; அதன் அகழி ஆழமானது, கடக்க முடியாதது.

இச்செப்பேடுகள் சகரயாண்டு 596-ல் கொடுக்கப் பெற்றன; அதாவது ஆங்கிலயாண்டு 674; அது விக்கிரமாதித்தனது 20ஆவது ஆட்சியாண்டாகும். இவை சோழ நாட்டில் காவிரிக்குத் தென் கரையில் அமைந்த உரகபுரத்தினின்று அளிக்கப் பெற்றன.

சோளிக விஷயம் என்பது சோழ மண்டலத்தைக் குறிக்கும்.

உரகபுரம் என்பது உறையூர். இவ்வூர் இப்பெயரால் காளிதாசரின் இரகுவம்சத்தில் பாண்டியரது தலைநகரமாகக் குறிக்கப் பெற்றது என்றும், உரகம்-பாம்பு, எனவே உரகபுரம் நாகப்பட்டினம் ஆதல் கூடும் என்றும், Dr உல்ஷ் கருதுவர். திரு. வெங்கையா அவர்கள் உறையூரையே உரகபுரம் என்பர். உறையூர்க்கு அண்மையிலுள்ள பெருவளநல்லூரில் நடந்த போரில் இவ்விக்கிரமாதித்தன் தோற்று ஓடியதாகத் தெரியவருவதால் உறையூரே உரகபுரம் எனப் பெற்றதாதல் வேண்டும் என்பது உறுதி.

விக்கிரமாதித்யனுடைய மனைவி பெயர் கங்கமஹாதேவி. கங்கம ஹாதேவியின் விருப்பத்தின் படியே கன்ஹ சர்மன்,