பக்கம்:ஆய்வுப் பேழை.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36


களில் வரி 1-104 வரை வடமொழி; 105-133 வரி தமிழ்; 133-136 வடமொழி; 137-ம்வரி தமிழ்; இறுதி சில எழுத்துக்கள் வடமொழி.

நுதலிய பொருள்

வரி 1-16 கடவுள் வாழ்த்து ; வரி 17-34 பிரமன் முதல் அசோகன் வரை ஆண்டமை; வரி 34-44 பல்லவ குலத்தின் புகழ்; வரி 45-50 ஸ்கந்தவர்மன் முதலிய 8 அரசர்கள் ஆண்டமை; வரி 50-62 சிம் விஷ்ணு முதல் இரண்டாம் பரமேசுவரன் வரை ஆண்டமை; வரி 62-64 நந்திவர்மன் அரசனானது; வரி 64-66 பீமவர்மன் மரபினர்; வரி 66-80 நந்திவர்மனின் சிறப்பியல்புகள்; வரி 80 சாஸனம் கொடுத்த ஆண்டு; வரி 80-35, வரி 92-97 ஜேஷ்டபாத சோமயாஜியின் சிறப்புக்கள்; வரி 85-92 பிரம்ஹஸ்ரீ ராஜன் சிறப்புக்கள்; வரி 97-102 தானம் பெற்ற ஊர்பற்றியவை; வரி 103 ஆஜ்ஞப்தி; வரி 104-133 தமிழ்ப் பகுதி; வரி 133-137 வடமொழிச் சுலோகங்கள்; வரி 137-138 நிலப்பரப்பு. இப்பட்டயம் "ஸ்வஸ்தி ஸித்திரஸ்து நம:" என்று முடிகிறது.

சிம்மவிஷ்ணு முதல் பரமே சவரன் II வரை (வரி 50-62)

இப் பகுதியில் 7 வடமொழிச் செய்யுட்கள் உள்ளன; சிம்மவிஷ்ணு முதல் இரண்டாம் பரமேசுவரன் வரை ஆண்ட பல்லவ அரசர்களைப் பற்றிக் கூறப் பெற்றவை பின் ஷவருமாறு:

சிம்மவிஷ்ணு (செ. 20)

உலகில் சிங்கம் போன்று (அவநி சிம்மன்) சிம்மவிஷ்ணு தோன்றிப் பகைவரை அழிப்பதில் ஈடுபட்டான்; களப்பிர, மாளவ, சோள, பாண்டிய, சிங்கள, கேரளர் ஆகியோரை வென்றான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுப்_பேழை.pdf/43&oldid=1388462" இலிருந்து மீள்விக்கப்பட்டது