பக்கம்:ஆய்வுப் பேழை.pdf/44

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

37


மகேந்திரவர்மன் I (செ. 21):

பின் மகேந்திரவர்மன் உலகை ஆண்டான். இவன் மகேந்திரன் போன்று புகழ் படைத்தவன்; இவனுடைய ஆணையை எல்லோரும் மதித்தனர்; இவன் தன் பகைவரைப் புள்ளலூரில் அழித்தான்.

நரசிம்மவர்மன் I [செ. 22]

வெற்றி வீரன் நரசிம்மவர்மன் பிறந்தான்; இலங்கையை வென்று இராமனைக் காட்டிலும் மேம்பட்ட புகழ் பெற்றான்; செருக்கிய பகைவர் குலத்துக்குத் தூமகேது போன்றவன்; வீரத்தால் வாதாபியை வென்று (வாதாபி என்னும் அசுரனை அழித்த) அகத்தியனைப் போன்றவனாயினான்.

மகேந்திரவர்மள் II செ. 23)

இவனுடைய நீண்ட கைகள் பகைவர் கூட்டத்துக்கு இடி போன்றவை; இவன் காலமுதல் கோயில்களின் நன்மைக்காகவும் பிராமணர்க்கும் தர்ம கர்மங்கள் தொடங்கப் பெற்றுச் சிறந்தன.

பரமேஸ்வர போத வர்மன் I (செ. 24)

இவன் இச்சைப்படியே இவ்வுலக அரசர்கள் நடந்தார்கள்; இவன் பூதி (செல்வம்) உடையவன்; பூதர்க(மக்க)ளுக்குத் தலைவன்; நந்தி இலைச்சினையுடையவன்; கட்வாங்கத்தைக் கொடியில் உடையவன்; மலைபோல் வன்மையுடையவன் [பூதி (விபூதி) தரித்தவனும், பூதங்களுக்குத் தலைவனும், நந்தியை உடையவனும், கட்டுவாங்கங் கொண்டவனும், மலையில் வசிப்பவனும் ஆன சிவனுக்கு ஒப்பானவன், இவ்வரசன்.]