பக்கம்:ஆய்வுப் பேழை.pdf/45

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38


நரசிம்மவர்மன் II (இராஜசிம்ஹன்) (செ. 25)

இவன் பரமேசுவரனே அவதாரம் எடுத்தாற் போன்றவன்; உடல்வலியாலும் பெயராலும் நரசிம்மாவதாரத்தை யொத்தவன்; இந்த க்ஷத்திய சூளாமணி தேவர்க்கும் பிராமணர்க்கும் செல்வத்தை யளித்தான்; பக்தியோடு தனக்குரிய பூதேவியை நான்மறையாளர் நுகருமாறு கொடுத்தான்.

பரமேசுவரவர்மன் II (செ. 26)

விரும்பிய செல்வங்கள் எல்லாவற்றையும் பெற்றான்; கலியின் கொடுமைகளை வென்றான்; பிரகஸ்பதி விதித்த வழியில் உலகத்தை நடத்தினான்.

நந்திவர்மன் அரசனானது (வரி 62-64) (செ. 27)

பகைவர்களைத் தன் ஆணையாலேயே அடக்கிய பரமேசுவரன் (II) ஆண்ட ராஜ்யத்தை நந்திவர்மன் ஆண்டான்; அவன் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டான் (-பிரஜாபி:); அவன் அறிவினால் பெருமதிப்புக்குரியவன்; கடல் போன்ற பல்லவ குலத்தில் முழுமதி போன்றவன்.

நத்திவர்மனின் முன்னோர் (பீமவர்மன் மரபினர்: வரி 64-66)

ஆறாவது (தலைமுறையினன்-ஷஷ்ட: செ. 28) ஸ்ரீ சிம்ஹ விஷ்ணுவின் தம்பி பீமவர்மன்; ஐந்தாவது (-பஞ்சம:) மக்களால் புகழப்படும் பல்லவேந்திரனாகிய புத்தவர்மன்; நான்காவது, இந்திரன் போன்ற ஆதித்தவர்மன்; மூன்றாவது, கோவிந்தவர்மன்; இரண்டாவது (-த்வீதிய:) மக்களுக்கு அடைக்கலம் தரும் ஹிரண்ய வர்மன். (குறிப்பு: இவ்விரணியவர்மனே இரண்டாம் நந்திவர்மனின் தந்தை.)

நந்திவர்மனின் சிறப்பியல்புகள் (வரி 66-80)

ஸ்ரீதரன்; போரில் விஜயன்; கர்ணீசுதன் போல் பல கலைகளிலும் வல்லவன்; அம்பு ஏவுதலில் இராமன்; யானை