பக்கம்:ஆய்வுப் பேழை.pdf/48

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

41


(குறிப்பு : இவன் வடமொழிப் பகுதி வரி 91-இல் பிரஹ்ம ஸ்ரீராஜன் என்றும், வரி 103-இல் பிரஹ்மயுவராஜன் என்றும், தமிழ்ப்பகுதி வரி 106-இல் பிரஹ்மதுவராஜன் என்றும் குறிக்கப் பெற்றுள்ளான்.)

தருமம்

நந்திவர்மன் II என்னும் பல்லவ அரசனது இருபத்திரண்டாவது ஆட்சியாண்டில் (கி.பி.732ல்), பிரம்ஹஸ்ரீராஜன் என்னும் மந்திரியின் விண்ணப்பத்தால், கோரசர்மன் ஆணத்தியாகத் தொண்டைமண்டலத்தில் பூனியம் (பூண்டி) என்னும் ஊரவரான ஜேஷ்டபாத சோமயாஜி என்னும் அந்தணர்க்குத் தொண்டை மண்டலத்து ஊற்றுக் காட்டுக் கோட்டத்துக் கொடுங்கொள்ளி என்ற ஊரை ஏகதீரமங்கலம் என்று பெயரிட்டு, முன் பெற்றாரை மாற்றித் தேவாதானப் பிரமதேயம் நீக்கிக் குடிநீக்கிப் பிரமதேயமாக அளிக்கப்பெற்றது. சேயாறு வெஃகா திரையனேரி ஆகியவற்றினின்று ஆற்றுக் காலும் வெள்ளக்காலும் தோண்டிக் கொள்ளலாம். இக்கால்களில் இருந்து குறங்கறுத்தும் குற்றம் பண்ணியும் கொண்டுண்டார் தண்டிக்கப்படுவர். இவரும் இவர் வழியினரும் மாடமும் மாளிகையும் சூட்டோட்டால் கட்டிக் கொள்ளலாம். இவ்வூர் எல்லா வரிகளினின்றும் நீக்கப் பெற்றது. இவ்வூர்க்கு எல்லை: கிழக்கிலும் தெற்கிலும் பாலையூர் (இந்நாளைய பாலூராக இருக்கலாம்); மேற்கு - மணற் பாக்கமும் கொள்ளிப்பாக்கமும்; வடக்கு - வெளிமானல்லூர்.

பிரசஸ்தி எழுதியவன்: திரிவிக்ரமன் (செ. 31)

இவன் மூன்று வேதங்களிற் சொன்னவண்ணம் கிரியைகளைச் செய்பவன்; சகல சாஸ்திர உண்மைகளை அறிந்தவன்.

இச் செப்பேடுகளை எழுதியவன் (வரி 136): ஸ்ரீ பரமேசுவர மகா காஷ்டகாரி.