பக்கம்:ஆய்வுப் பேழை.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7. நிருபதுங்கவர்மனின்

வாகூர்ச் செப்பேடுகள்

வாகூர்ப்பதி

வாகூர் அல்லது பாஹுர் (Bahur) கடலூரினின்று புதுச்சேரிக்குச் செல்லும் பெருவழியில் புதுச்சேரிக்கு இப்பால் உள்ளது: இந்நாளில் வாகூர் சிற்றூராக இருக்கிறது. பெருவழிக்கு ஒருபுறத்தில் இரண்டு கல் தொலைவில் இருக்கிறது. பெருவழிக்கு இன்னொரு புறம் பழைய குளமும், பெருமாள் கோயிலும் காணப் பெறுகின்றன. இவ் வெல்லாப் பகுதிகளையும் பழைய வாகூர்ப்பதி கொண்டதாய்ப் பேரூராக இருந்திருத்தில் வேண்டும். இந்நாளைய வாகூரில் ஒரு சிவன் கோயில் உள்ளது; மூலேசுவரர் என்பது இறைவன் திருநாமம். இக் கோயிலில் மூன்றாம் கிருஷ்ணன், முதல் இராசராசன், முதல் இராசேந்திரன், இரண்டாம் இராசேந்திரன், முதற் குலோத்துங்கன் ஆகியோர் கல்லெழுத்துக்கள் உள்ளன. (S. I. I. Vol. VII, No. 738 to 814; A. R. 171 to 187 of 1902.)

வாகூர்ச் செப்பேடுகள்

வாகூர்ச் சிவன்கோயில் கோபுரத்துக்கு (Pagoda) 6 மீடர் தொலைவில் கற் கட்டடத்துக்குள் ஒரு மீட்டர் ஆழத்துள் 5 செப்பேடுகள் கிடைத்தன. அவை 91.5 மி. மீ. உயரம் உள்ளவை ; 201.9 மி. மீ. அகலமுடையவை ; 4.1 மி. மீ. கனமுள்ளவை. ஒவ்வொரு செப்பேட்டிலும் 13.5 மி. மீ. குறுக் களவுள்ள துளையுண்டு; இடது பக்கத்தினின்று 9 மி. மீ. தொலைவில் அத்துளை இருக்கிறது. எல்லாச் செப்பேடுகளையும் பிணிக்கும் வளையம் கிடைத்திலது; வளையத்தின் இரு முனைகளையும் பிணித்து வைத்திருக்கக்கூடிய முத்திரையும் கிடைக்கப் பெறவில்லை. அவை அங்குச் செப்பேடுகள் புதை-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுப்_பேழை.pdf/49&oldid=1388503" இலிருந்து மீள்விக்கப்பட்டது