பக்கம்:ஆய்வுப் பேழை.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44


நூலில் 49-ஆவது பக்கமுதல் செப்பேட்டுச் சமஸ்கிருதப் பகுதியை திரு T. A. கோபிநாதராவ் அவர்களின் ஆங்கில மொழிபெயர்ப்புடன் தந்துள்ளார். பல்லவர் செப்பேடுகள் முப்பது என்ற நூலில் இப்பட்டயம் முன்னுரை தமிழ் மொழி பெயர்ப்பு ஆகியவற்றுடன் தரப்பெற்றுள்ளது. (பக்கம் 263-276).

செப்பேட்டு மொழி - மொழி நிலை

செப்பேட்டில் கண்டமொழி சமஸ்கிருதமும் தமிழும் ஆகும், எழுத்துருவம் கிரந்தமும் தமிழும். இதில் 32 சமஸ்கிருத செய்யுட்கள் (வரி 1-45; 74-77) உள்ளன; எஞ்சிய பகுதி (வரி 4574; 78-9) தமிழ்-வசனமாகும். தமிழ்ப் பகுதியிலும் கிரந்த எழுத்துக்களில் சில சொற்கள் எழுதப்பட்டுள்ளன. 34 ஆவது வரியில் கிரந்தப் பகுதியில் "றைப் புனைச்சேரி" என்பது தமிழ் எழுத்தில் உள்ளது. நிலைதாங்கி என்ற தமிழ்ச் சொல் வரி 30ல் கிரந்த எழுத்திலேயே எழுதப் பெற்றுள்ளது. தமிழ் உச்சரிப்பு முறையின் படி தந்தி வர்மன் Danti என்பதற்கு மாறாக Tanthi என்றும் க்ஷ என்பதற்குப் பதில் ட்ச என்றும், மேயி; நெல் வாயி என்ற உருவங்களும் உள்ளன.

நுதலிய பொருள்

முதற் செய்யுள் திருமால் வணக்கம்; 2-8 செ. பிரமன் முதல் விமல கொங்கர் வரை பல்லவர் கால் வழிமுறை; 9-11 செ. நந்திவர்மன்; 12 நந்திவர்மன் III; 13-14 சங்கா ; 15-17 நிருபதுங்கன்: 18-21 மார்த்தாண்ட ன்; 22-23 மூன்றூர்கள்; 24-26 வித்யாஸ்தானம்; 27-30 ஆஜ் ஞப்தி, பிரசஸ்தி எழுதியோர்; வரி 45-74 தமிழ்ப் பகுதி-மூன்றூர்கள் எல்லை; அறம் செய்தமை; செ. 31 அரசனின் வேண்டுகோள்; செ. 32 பட்டயம் எழுதியோன்; வரி 78-79 தமிழ்ப்ப குதி, செ. 32 -ல் உள்ள செய்தியே

காலம்

வாகூர்ச் செப்பேடுகள் நிருபதுங்களின் 8-ஆவது ஆட்சியாண்டில் கொடுக்கப்பெற்றன (வரி 46, 51); அதாவது கி. பி. 858 ஆகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுப்_பேழை.pdf/51&oldid=1388519" இலிருந்து மீள்விக்கப்பட்டது