பக்கம்:ஆய்வுப் பேழை.pdf/60

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
53மணம் புகுதவும் பிணம் போகவும் சுடுகாடு பெறுவதாகவும்” என்னும் மிக எச்சரிக்கையுடன் குறிக்கப்பெற்ற பாதுகாப்பு முறை கவனிக்கத்தக்கது. இந்நிலத்தின் எல்லையும் கல்வெட் டில் மிக்க அழகாக விவரிக்கப்பெற்றுள்ளது. திருவையாறுடை யார் பூரீ கோயிலிற் பெரிய புறத்திருச்சுற்ருலேயின் வடக்கில் 4 கோல் அகலமுடைய திருவிழாவீதி இருந்தது. அவ் வீதிக்கு வடக்கில் அந்நிலம் அமைந்திருந்தது.

கோயில் பட்டரும் கோயில் எடுத்த ஆண்டும்

இக்கல்லெழுத்தில் கையொப்பமிட்ட சிவப்பிராம்மணர் களில் ஒருவர், ”வாளுவன் சிவபாத சித்தன் பரதேவனை ஒலோகமாதேவிபட்டன்” என்று இத் தி ரு க் கோ யி ற் பெயரோடும் சேர்த்துக் கூறப்பட்டுள்ளார். இச்சாசனம் இராசராசனது 21-ஆம் ஆட்சியாண்டிலேயே தரப்பெற்றதாத 'லின் இத் திருக்கோயில் கி. பி. 1005-க்குள்ளாகவே கட்டப்

பெற்றிருத்தல் வேண்டும் எனத்தெரிகிறது.

திருவிளக்குத் தொண்டு

இத் திருக்கோயிலில் திருவிளக்கு இடுவதற்கு இராச ராசனது 21- ஆம் ஆட்சியாண்டில் ஒரு நிபந்தம் அளிக்கப் பெற்றுள்ளது. பெரும்புலியூர்க்குடி மன்ருடி ஐயாறன் வள வன் என்பவர் இரண்டு விளக்குகள் எரிக்க 192 குடிநீக்காச் சாவாமூவாப் பேராடுகளை அளித்தார். இவ்வரசனது 22 ஆம் ஆட்கியாண்டில் ஒரு விளக்கு எரிக்க இன்ைெருவர் 96 சாவா மூவாப் பேராடுகளை அளித்தார். இவர் வீமயன் வம்பவை என்ற பெயருடையவர்; இவர் சாளுக்கிய வீமயன் என்பார் மனைவி; வஞ்சயன் பெற்றப்பை என்பவருடைய In 356tr.

7. S. I. I. Vol. V No. 517 8. , ,, 516 9. † : ,, . 521