பக்கம்:ஆய்வுப் பேழை.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
59


சிவலிங்கபெருமான் சிறப்பாக இருந்தருளுகிருர். இறையக த்து வா யி ற் கா வ ல ர் கம்பீரமான தோற்றமுடையவர். கோயிலின் புறத்தோற்றமும் மிகக் கம்பீரமாகவேயுள்ளது இக்கோயிலைக் குறித்துப் பலரும் நன்கு அறியார். பலரும் சென்று வழிபடின் இக்கோயில் பண்டைய நிலையையடைந்து சிவபாத சேகரனின் மெய்ப்புகழைப் பரப்பும் என்பது திண்ணம்.

(2) திருவலஞ்சுழியில் கூேடித்திரபாலதேவர் திருக்கோயில்

சேஷத்திரபாலர் என்பவர் பைரவர் ஆவர். திருவலஞ் சுழியில் இப்பைரவர் கோயிலே எடுப்பித்தவர் ஒலோகமா தேவியார். இராசராச தேவர் மகாதேவியார் தக்தி சக்தி விடங்கியாரான பூ ஒலோகமாதேவியார் உய்யக்கொண்டார் வளநாட்டுப் பாம்பூர் நாட்டுத் திருக்குட மூக்கின் பால் திரு வலஞ்சுழியில் நாம் எடுப்பித்த திருக்கற்றளி பிள்ளையார் கூேடித்திரபால தேவர்க்கு’ என்னும் கல்வெட்டுப் பகுதியால் 8 இதனை அறியலாம். இந்த கூேடித்திரபாலதேவர் திருக்கோ யில் திருவலஞ்சுழி திருக்கோயில் வெளிப் பிராகாரத்தில் இராச கோபுரத்திலிருந்து இரண்டாம் கோபுரத்துக்குச் செல்லும் வழியில் தெற்குப் பக்கத்தில் உள்ள தோப்பில் இடிந்த நிலையில் உள்ளது; கல்வெட்டுக்களுடன் சிறு கோயிலாக விளங்குகிறது. 1000 யாண்டுகளுக்குமுன் பொன்னும் மணி யும் பூட்டிப் பொலிவுடன் விளங்கிய மூர்த்தி இன்று கேட் பாரற்றுத் தன்னந்தனியாக இயற்கையோடு இயைந்து வாழ் கிருர். இப்பைரவ மூர்த்திக்கு 16 திருக்கைகளுண்டு. மூர்த்தி சிறிது பழுதுபட்டிருப்பினும் இன்னும் காண்பார் கண்ணையும் கருத்தையும் ஈர்க்கவல்லவராய் உள்ளார் !

_ - _காக- _து

2 சிவபாதசேகரன் - இராசராசன் 1 3 S. I. I. Vol. VIII No. 234.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுப்_பேழை.pdf/66&oldid=980734" இலிருந்து மீள்விக்கப்பட்டது