பக்கம்:ஆய்வுப் பேழை.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66


தேவிச்சேரி என்பது. இங்ஙனம் இவ்வம்மையார் பெயரை ஊர்களும் தெருக்களுக்கும் இட்டு இவ்வம்மையாரைப் பண்டைப் பெருமக்கள் நினைவு கூர்ந்தமை அறியத்தக்கது.

தாய்

உலோகமாதேவியாரின் தாய் பெயர் குண்டனன் அமிர்தவல்லி என்று கீழூர்க் கல்லெழுத்தால் அறியப் பெறுகிறது (239 of 1902) இது முதலாம் இராசராசனது 9-ஆம் ஆட்சியாண்டுக்குரியது. இவ்வம்மையார் விளக்கெரிக்கப் பொன் அளித்ததாக இக்கல்லெழுத்தில் உள்ளது.

முடிவுரை

இதுகாறும் கூறியவாற்றான் தந்திசக்தி விடங்கியாராகிய ஒலோகமாதேவியார் பல திருப்பணிகளை யாற்றிச் சிவம் பெருக்கியமை தெற்றென விளங்கும். "தம் புகழ்நிறீஇத்தாம் மாய்ந்த" அம்மையாரின் நினைவு சைவநன்மக்களை நன்னெறிப் படுத்துவதாகும்.




"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுப்_பேழை.pdf/73&oldid=1388532" இலிருந்து மீள்விக்கப்பட்டது