பக்கம்:ஆய்வுப் பேழை.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68


திருத்தொண்டர் திருவந்தாதி

திருத்தொண்டத் தொகையில் கண்ட அடியார்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாடல் வீதம் திருத்தொண்டர் திருவந்தாதி என்ற பெயரில் 89 பாடல்கள் எழுதியவர் நம்பியாண்டார் நம்பிகள். இத்திருவந்தாதியைத் திருத்தொண்டத் தொகைக்கு வகைநூல் என்பர். இத்திருத் தொண்டர் திருவந்தாதியில் 85 ஆவது பாடல் இசைஞானியாரைப் பற்றியது ஆகும். இப்பாடல் பின் வருமாறு:-

பயந்தாள் கறுவுடைச் செங்கண்வெள்
ளைப் பொள்ளல் நீள்பனைக்கைக்
கயந்தான் உகைத்தநற் காளையை
என்றுங் கபாலங் கைக்கொண்
டயந்தான் புகும் அரன் ஆரூர்ப்
புனித அரன்திருத்தாள்
நயந்தாள் தனதுள்ளத் தென்றும்

உரைப்பது ஞானியையே.

("காளையைப் பயந்தாள்" என்றும், "அரன் திருத்தாள் தனதுள்ளத்து நயந்தாள்" என்றும் உரைப்பது ஞானியை என்று கூட்டுக.)

பெரியபுராணம்

திருத்தொண்டத் தொகைக்கு விரி நூலாக அமைந்தது பெரியபுராணம். பெரிய புராணம் ஆகிய திருத்தொண்டர் புராணத்தில், இசைஞானியார் புராணத்தில் பின் வரும் ஒரு பாடல் மட்டும் காணப் பெறுகிறது:

"ஒழியாப் பெருமைச் சடையனார்
உரிமைச் செல்வத் திருமனையார்
அழியாப் பரங்கள் எய்தழித்தார்

ஆண்ட நம்பி தனைப்பயந்தார்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுப்_பேழை.pdf/75&oldid=1388544" இலிருந்து மீள்விக்கப்பட்டது