பக்கம்:ஆய்வுப் பேழை.pdf/82

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
75



வேலைவ யமுதன் னுளும்

வீரனும் விரிந்த நாணல் மாலைவாய்ப் பாரின் பாயல்

வைகினர்; வரிவில் ஏந்திக் காலேவா யளவுந் தம்பி

இமைப்பிலன் காத்து நின்றன்"

என்று சுவை பொருந்தச் சித்திரிக்கிருன்; இதே செய்தியைப் பின்னர் வந்த பரதனிடம் குகன் கூறுவதாக ஒரு பாடலில் மெய்ப்பாடு மிளிரச் சொல்கிருன்:

"அல்லையாண் டமைந்த மேனி

அழகனும் அவளும் துஞ்ச

வில்லையூன் றியகை யோடும்

வெய்துயிர்ப் போடும் வீரன்

கல்லையாண் டுயர்ந்த தோளாய்,

கண்கள் நீர் சொரியக் கங்குல்

எல்லேகாண் பளவும் நின்ருன்

இமைப்பிலன் நயனம் என்ருன்.”

இவ் வில்லி, இலக்குவன். இவனே 'உறங்கா வில்லி’

என்று சொல்லலாம்.

கல்வெட்டில் சுந்தர வில்லி

சுந்தர வில்லி என்று இராமனேக் குறிக்கக் கம்பன் பயன்படுத்திய பெயர் 13-ஆம் நூற்ருண்டில் ஒருவனுக்குப் பெயராக இருந்தது என்று புதுக்கோட்டைச் சாசனங்கள் என்ற கல்வெட்டுத் தொகுதியால் அறிகிருேம். அத்தொகுதி யின் 342-ஆவது சாசனம், செவலூர்ப் பூமீசுவரர்கோயிலில்: சுவாமி கோயில் தென்புறச் சுவரில் உள்ளது. அச்சாசனம் சுந்தர பாண்டியன் என்ற பாண்டிய அரசனுடைய 11-ஆவது