பக்கம்:ஆய்வுப் பேழை.pdf/85

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
78சென்றுகொண்டிருந்தார் இராமாநுசர். செல்பவர் தம் சீடர்களுள் இருவரின் கைமேல் ஆடையை மடித்துவைத்து அதன் மேல் தன் கை வைத்துச் செல்வது பழக்கம். உறங்காவில்லி தாசர் எதிரில் வந்து வணங்கினர். உடனே இராாமநுசர் வேடவில்லியார் தோளின்மேல் தம்முடைய கையை வைத்து அவர்மீது சாய்ந்து நடந்தார்; இதற்குரிய காரணம் வினவ, அவருடைய உடம்பைத் தீண்டினாலே தமக்குப் புதிய சக்தி பிறப்பதாகக் கூறினர். ஒரு சமயம் யாவருக்கும் தெரியாமல் இராமாநுசர் தம்முடைய சீடர்களின் ஆடைகளில் ஒரு சிறிது கிழித்து எடுத்து மறைத்து வைத்தார்; கிழிக்கப்பட்டிருந்ததைக் கண்டு யாவரும் கூக்குரலிட்டனர். மறுநாள் இராமாநுசர் இருவரை அழைத்துப் பொன்னாச்சியாரின் நகைகளைக் களவாடி வருமாறு ஏவினார். சென்றவர்கள் அம்மையாரின் ஒரு பக்கத்துக் காதணிகளைக் கழற்றினர். இதை அறிந்த அம்மையார் இன்னொரு புறத்துக் காதணிகளையும் கொண்டு செல்வாராகுக என்று நினைத்துப் புரண்டார்; அம்மையார் விழித்துக் கொண்டார் என்று நினைத்து அவர்கள் திருடிக் கொண்ட காதணியுடன் இராமாநுசரிடம் வந்தனர். நடந்ததை அறிந்த வில்லியார், திருடர்கட்கு நேர்ந்த ஏமாற்றத்தை அறிந்து வருந்தித் தன் மனைவியைப் புறகு என ஒதுக்கினார். இச்செய்தியை அறிந்து, இராமாதுசர் இருவரையும் அழைப்பித்து, உண்மையை யாவரும் உணருமாறு கூறி, அவ்விருவருடைய உள்ளத் தூய்மையையும் பொருட்பற்றின்மையையும் உலகினர்க்கு அறிவித்து, அவ்விருவரையும் ஒருங்கு சேர்ப்பித்தார். இவரும் இலக்குமணருடைய பெயர் தரித்த ஸ்ரீவைஷ்ணவர் ஆதல் அறிந்து இன்புறற் பாலதாகும்,

நெல்லூர்க் கல்வெட்டில்

நெல்லூர் ரீரங்கநாயகர் கோயிலில் முதற் குலோத்துங்க சோழனது 31 ஆவது ஆட்சியாண்டுக்குரிய கல்வெட்டில் உறங்கா வில்லிதாசர் என்றொருவர் குறிக்கப் பெறுகிறார், இது பூந்தமலி வெட்டந்தை நம்பியாண்டி மகன் வெம்பாழ் வான் கொடுத்த சாசனம் ஆகும். இது கி.பி. 1111-க்குரியது. (S. I.I.Vol. V, No. 491).