பக்கம்:ஆய்வுப் பேழை.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11. எண்ணலங்காரம்

குறிப்பில் தருமொழி

சொற்கள் குறிப்பாகவும் வெளிப்படையாகவும் பொருளைத் தருவன ஆகும். ‘ஊர் உறங்கியது’ என்பதில் ஊர் என்பது மக்களைக் குறிக்கும். இதனை இடவாகுபெயர் என்று கூறுவர் இங்ஙனம் ஆகுபெயருள் பலவகை உண்டு.

‘அலங்குளேப் புரவி ஐவரொடு சினைஇ
நிலந்தலேக் கொண்ட பொலம்பூந் தும்பை
ஈரைம் பதின்மர் பொருதுகளத் தொழியப்

பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்!’

என்ற இடத்தில் நூற்றுவர் என்பது துரியோதனனை முதலாகக் கொண்ட நூறுபேரையும், ஐவர் என்பது தருமனே முதலாகக் கொண்ட ஐந்து பேரையும் குறிக்கும். இதனைத் தொகைக் குறிப்பு என்பர். இங்ஙனம் குறிப்பால் பிற பொருள்களே உணர்த்தும் மொழிகளைக் குறிப்புமொழி என்று கூறுவர். இவற்றை,

“ஒன்றெழி பொதுச்சொல் விகாரம் தகுதி
ஆகுபெயர் அன்மொழி வினைக்குறிப்பே
முதல்தொகை குறிப்போடு இன்னபிறவும்

குறிப்பில் தருமொழி அல்லன வெளிப்படை”

என்ற சூத்திரத்துள் நன்னூலார் கூறியுள்ளார்.

பிற குறிப்பு

பல்வேறு வகைகளில் கொடுக்கப்பட்ட சொற்களால் பொருளே உணர்ந்துகொள்ளுமாறு அமைப்பது பிறகுறிப்பு என்னலாம். பிறகுறிப்புக்கு உதாரணமாகப் புறப்பொருள் வெண்பாமாலையில் - பாடாண்திணையில்-ஓம்படை என்னும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுப்_பேழை.pdf/86&oldid=1389028" இலிருந்து மீள்விக்கப்பட்டது