பக்கம்:ஆய்வுப் பேழை.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
80



துறைக்குக் கொடுக்கப்பட்ட பின்வரும் பாடல் இலக்கண உரையாசிரியர்களால் தரப்பெற்றுள்ளது:

“ஒன்றில் இரண்டாய்ந்து மூன்றடக்கி நான்கினால்
வென்று களம்கொண்ட வேல்வேந்தே - சென்றுலாம்
ஆழ்கடல்சூழ் வையகத்துளே ந்துவென் ருறகற்றி

ஏழ்கடிந்து இன்புற் றிரு.”

இதில் ஒன்றுமுதல் ஏழுவரை உள்ள எண்கள் பயன்படுத்தப் பெற்றுள்ளன. இவ்வெண்கள் ஒவ்வொன்றும் குறிப்பாகப் பல பொருள்களை அறிவிப்பனவாகும். இப்பாடலில் கண்ட எண்களின் விளக்கம் பின்வருமாறு:

ஒன்று - ஞானம்
இரண்டு - காரண, காரியங்கள்
மூன்று - நட்பு, பகை, நொதுமல்
நான்கு - யானை, தேர், குதிரை, காலாள்
ஐந்து - மெய், வாய், கண், மூக்கு, செவி
ஆறு - நட்பு, பகை, செலவு, நல்லிருக்கை, கூடினரைப் பிரித்தல், கூட்டல்

ஏழு - வேட்டம், கடுஞ்சொல், மிகுதண்டம், சூது, மிகுபொருளிட்டம், கள், மிகுகாமம்

இவ்வெண்களே வேறு கூறுவாரும் உளர். அவை வருமாறு:

ஒன்று - ஆன்மா
இரண்டு - புண்ணியம், பாவம்
மூன்று - காமம், வெகுளி, மயக்கம்
நான்கு - சாம, தான, பேத, தண்டம்
ஐந்து - சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம்

ஆறு - படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுப்_பேழை.pdf/87&oldid=1389034" இலிருந்து மீள்விக்கப்பட்டது