பக்கம்:ஆய்வுப் பேழை.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
81



எண்ணடுக்கு

மேற்கண்டவாறு எண்கள் தொகைக்குறிப்பான் பொருளை உணர்த்தாது, ஒன்றுமுதல் பதினெட்டு ஈருக அடுக்கி, வெண்பா யாப்பில் காளமேகப்புலவர் பாடிய பாட்டொன்று தனிப்பாடல் திரட்டில் காணப்படுகிறது. அஃது பின்வருமாறு:—

“ஒன்றிரண்டு மூன்றுநான் கைந்தாறு ஏழெட்டு
ஒன்பது பத்துப் பதினுென்று பன்னி
ரண்டுபதின் மூன்றுபதி நான்குபதி னேந்துபதி

ணுறுபதி னேழுபதி னெட்டு.”

இப்பாடலில் முதல்வரியில் ஐந்தாறு ஏழெட்டு என்ற இரு இடங்களிலும் உயிர்வரின் உக்குறள் மெய்விட்டு ஓடாமை குறையே ஆகும்.

எண்ணலங்காரம்

மேலே கண்டவாறு எண்கள் பிற குறிப்பான் பிற பொருளே உணர்த்துதல் இன்பம் பயப்பதாக இருக்க எண்களை வரிசையாக அடுக்கி அவற்ருேடு அவ்வெண்கள் குறிக்கும் பொருளே யும் இணைத்துப்பாடும் பழக்கம் காணப் படுகிறது. சிவஞான சித்தியார் சுபக்கத்துக்கு விநாயகர் துதியாக அமைந்த பின்வரும் பாடல் இவ்வழகு வாய்ந்த தாக இருக்கிறது:

ஒரு கோட்டன் இருசெவியன் மும்மதத்தன்
    நால்வாய்ஐங் கரத்தன் ஆறு
தருகோட்டம் பிறையிதழித் தாழ்சடையான்
    தரும் ஒருவா ரணத்தின் தாள்கள்
உருகோட்டன் பொடும்வணங்கி யோவாதே
    இரவுபகல் உணர்வோர் சிந்தைத்
திருகுஒட்டும் அயன் திருமால் செல்வமும்ஒன்

    றோ, என்னச் செய்யும் தேவே!
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுப்_பேழை.pdf/88&oldid=1389043" இலிருந்து மீள்விக்கப்பட்டது