பக்கம்:ஆய்வுப் பேழை.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
82

இப்பாடலில் நால்வாய் என்பதிலுள்ள நான்கு என்பதும், ஆறு என்பதும் எண்கள் போன்றிருப்பினும் எண்களைக் குறிக்கவில்லை.

இப்பாடலில் கண்ட அணியை எண்ணலங்காரம் என்று சிவஞான முனிவர் சிற்றுரையில் கூறியுள்ளார்.

சம்பந்தர் தேவாரத்தில்

திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிய திருவிழிமிழலைத் திருப்பதிகத்துப் பாடலொன்றிலும் இவ்வெண்ணலங்காரம் பொருந்தியிருத்தலேக் காணலாம். அப்பாடல்,

ஈறாய்முதல் ஒன்ருய் இரு பெண் ஆண்குண மூன்றாய்
மாருமறை நான்காய்வரு பூதம் அவை ஐந்தாய்
ஆறர்சுவை ஏழோசையொ டெட்டுத்திசை தானாய்

வேறாய்உடனா னான் இடம் விழிம்மிழ லையே

என்பது. உலகிற்கு இறுதியைச் செய்யும் முதல்வன் அந்தமும் ஆதியும் ஆகும்போது வேருய் நிற்கிருன்; உலகியல் பொருள்களோடு ஒன்றாய் நிற்கிறான்; உயிர்களோடு உடனாய் நிற்கிறான். இச்செய்திகளைச் சம்பந்தர் மேற்குறித்த பாடலில் அருளிச் செய்துள்ளார். இறைவன் ஒன்றாய் நின்று உலகியல் பொருள்களே இயக்கும் திறத்தைக் கூறவந்த பகுதியே ‘ஒன்றாய்’ என்பது முதல் ‘எட்டுத்திசை தானாய்’ என்பது வரை ஆகும். இதனுள்,

ஒன்று - ஒன்ருய் இருந்து உலகியற் பொருள்களோடு ஒன்ருய் நிற்பது
இரண்டு - ஆண், பெண்
மூன்று (குணம்) - சத்துவம், இராஜசம், தாமசம்
நான்கு (மறை) - இருக்கு, யசுர், சாமம், அதர்வணம்
ஐந்து (பூதம்) - நிலம், நீர், தீ, வளி, ஆகாயம்

ஆறு (சுவை) - துவர்ப்பு, உவர்ப்பு, கார்ப்பு, கைப்பு, புளிப்பு, இனிப்பு
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுப்_பேழை.pdf/89&oldid=1389048" இலிருந்து மீள்விக்கப்பட்டது