பக்கம்:ஆய்வுப் பேழை.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
85



இதில் ஒன்று முதல் எட்டு வரை எண்கள் பயின்றுள்ளன. இரண்டைக் குறிக்கும் ‘இரு’ என்பது பெருமை என்ற பொருளிலும், ‘களரியைந் தாறுசெல்வீர்’ என்ற இடத்தில் ஐந்து ஆறு என்ற எண்கள் குறிப்பாக வேறு பொருளிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

திருவள்ளுவ மாலையில்

திருவள்ளுவ தேவரையும் அவர் தம் திருக்குறளேயும் சங்கப் புலவர்கள் போற்றிப் புகழ்ந்து பாடிய நூலாகக் கருதப் பெறும் திருவள்ளுவமாலையில் களத்துார் கிழார் பாடிய பாடல் ஒன்றுளது. அது,

‘ஒருவர் இருகுறளே முப்பாலின் ஓதும்
தருமம் முதல் நான்கும் சாலும் - அருமறைகள்
ஐந்தும் சமயநூல் ஆறும் நம் வள்ளுவனார்

புந்தி மொழிந்த பொருள்’

என்பது. இப்பாடலுள் ஒன்று முதல் ஆறு வரை எண்கள் பயின்றுள்ளன. இப்பாடலில் எண்களின் விளக்கம் பின்வருமாறு:

ஒருவர் -
இருகுறள் - ஒருவிகற்பக்குறள், இருவிகற்பக்குறள்
முப்பால் - அறத்துப்பால், பொருட் பால், காமத்துப்பால்
தருமமுதல் நாங்கு - அறம், 'பொருள், இன்பம், வீடு
மறைகள் ஐந்து - இருக்கு, எசுர், சாமம், அதர்வனம்,பாரதம்

சமயநூல் ஆறு - சைவம், வைணவம், சாக்தம்,செளரம், கானுபத்யம், கெளமாரம்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுப்_பேழை.pdf/92&oldid=1389077" இலிருந்து மீள்விக்கப்பட்டது