பக்கம்:ஆய்வுப் பேழை.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90


நக்கீரதேவநாயனார் பதினொராம் திருமுறையில் அருளியுள்ள திருஎழுகூற்றிருக்கையும், 11-ம் திருமுறையில் கண்ட நக்கீரர் பாடிய "ஓருரு" வும், மாறனலங்கார மேற்கோட் பாடலாகவுள்ள "ஒரு தனித்திகிரி"யும், இவ்வலங்காரம் கொண்டனவேயாம்.

நாலாயிர திவ்ய பிரபந்தத்தில்

திவ்விய பிரபந்தத்தில் இரண்டாவதாயிரம்-திருமங்கை யாழ்வார் அருளிய பெரிய திருமொழியில்-இரண்டாம் பத்து, பத்தாம் திருமொழி, இரண்டாவது பாசுரம் பின் இரண்டடிகளில் ஏழு முதல் எண்கள் இறங்குமுகமாக எண் அலங்காரம் பொருந்தவுளது. அப் பாடற்பகுதி பின் வருமாறு:

வந்தனை செய்து இசையேழ் ஆறங்கம் ஐந்து
வளர்வேள்வி நாண்மறைகள் மூன்று தீயும்
சிந்தனைசெய் திருபொழுதும் ஒன்றும் செல்வத்

திருக் கோவலூரதனுட் கண்டேன் நானே.

மூன்று முதல் ஏழு வரையில் ஏறுமுகமாக எண்கள் பயின்றவற்றைப் பெரிய திருமொழி 3-8-4ல் காணலாம்.

திருமங்கையாழ்வார் பாடியருளிய திருவெழுகூற்றிருக்கையும் திவ்யப்பிரபந்தத்தில் உண்டு. இது 46 அடிகளால் அமைந்த நிலைமண்டல ஆசிரியப்பா ஆகும்.

இத்திருவெழுகூற்றிருக்கையை இரதபந்தத்தில் அமைப் ஷபது ஒருமுறை. ஆகவே இதனைச் சித்திரகவியின்பாற்படுத்தலாம்.

முடிப்புரை

எண்ணலங்காரம் பொருந்திய பாடல்கள் இன்னும் எத்தனையோ உள. முன்னர்க் கூறிய 'ஈறாய்முதலொன்றாய்'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுப்_பேழை.pdf/97&oldid=1460121" இலிருந்து மீள்விக்கப்பட்டது