பக்கம்:ஆய்வுப் பேழை.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



12. தொனி

ஒரு செய்தியைச் சொல்லுமிடத்து வேறொரு பொருளும் உடன் அறியுமாறு அமைக்கப்பெறுவது தொனி எனப்பெறும். த்வனி-துவனி-தொனி இவை எல்லாம் ஒரு பொருளன. துவனி என்றால் ஓசை என்று பொருள்படும். சம்பந்தர் தேவாரம்-காஞ்சிபுரம்-திருவியமகம்- “தூயவானவர் வேதக் துவனியே” காண்க. துழனி என்பதும் ஓசை என்று பொருள் படும்

யமகம் என்று ஒரு சொல்லணியுண்டு. ஒரு சொல்லோ தொடரோ மடங்கி வேறுபொருள் அமையுமாறு பாடப்பெறுவது அது; மடக்கு என்பதும் அதுவே. ஆனால் தொனி என்பது அங்ஙனம் அன்று. கண் பார்வைக்கு அல்லது செவியுணர்வுக்குச் சொல்லளவில் அல்லது ஒலியளவில் சொற்கள் அமைந்திருக்கப் பொருள் புலப்பாட்டின்போது புலவன் கருதிய வேறுபொருள் அமையப்பெறின் அங்குத் தொனி என்னும் அழகு அமைந்துள்ளது எனக்கொள்ளலாம். இவ்வழகு இலக்கியங்களில் அருகியே காணப்படுவது.

ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் சிவஞானத்தைக் களிறாக உருவகிக்கிறார். துதி செய்வதால் சிவஞானமாகிய களிறு பஞ்ச மலங்களையும் சுவரச் செய்கிறது. சிவஞானம் களிறாக உருவகம் செய்யப் பெற்றதற்கேற்பத் துதிக்கையினால் என்று யானே க்குரிய துதிக்கை என்னும் உறுப்பின் பெயர் அங்கு ஆசிரியரால் தொனிப்பொருள் அமையப் பெய்தருளப் பெற் றது. இங்கு வேண்டற்பாலது, துதிக்கை என்னும் உறுப் புச்சொல் அமைப்பு அல்ல; ஆல்ை துதிக்கை எனும் சொல் இங்குத் தொனிப் பொருள் உடையதாய் அழகு தருவ தாயிற்று. i

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுப்_பேழை.pdf/99&oldid=1389100" இலிருந்து மீள்விக்கப்பட்டது