பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 99

நீளம்கொள் சிலையோன் மற்றை

நேரிழை நெடிய நம்பி தோளின்கண் மனம்வைத்து அன்ன

சுடர்மணித் தடங்கள் கண்டாள்' (4)

நேமி வாளங்கள் = சக்கர வாளப் பறவைகள். சிலை யோன் = இராமன். நேரிழை = சீதை.

பெண்ணின் மார்பகத்திற்குச் சக்கரவாளப் பறவை ஒப்புமை. இரு பறவைகளைக் கண்ட இராமன், அவை போல் உள்ள சீதையின் மார்பகங்களைப் பார்த்தான். இராமனின் தோள்கட்கு உருண்டு திரண்ட தோற்றத்தில் உள்ள மணல்மேடு உவமை. இராமனின் தோள்களைப் பார்த்த சீதை உடனே மணல்மேடுகளை நோக்கினாள்.

இருவர் பார்த்த முறையிலும் வேறுபாடு உண்டு. உவமையை முதலில் பார்த்துப் பின் கொங்கையை இராமன் பார்த்தான். தோள்களைப் பார்த்தபின் சீதை உவமைப் பொருளைப் பார்த்துள்ளாள்.

நீண்ட நூல் எழுதுபவர்கள் முதலில் எழுதிய ஒரு கருத்தை மறந்துவிட்டுப் பின்னாலும் ஒரிடத்தில் அதைக் கூறுவர். இது கூறியது கூறல் என்னும் குற்றத்தின்பாற் படும். அயோத்தியா காண்டம் - மிதிலைக் காட்சிப் படலத்திலும் இதே மாதிரியில் கம்பர் பாடியுள்ளார். முதல் முதல் இராமனும் சீதையும் ஒருவரை ஒருவர் நோக்கிக் கொண்டபோது, சீதையின் நோக்கு என்னும் வேல்கள் தோள்களில் ஆழ்ந்தனவாம்; இராமனின் கண்கள் சீதையின் மார்பகத்தில் தைத்துக் கொண்டனவாம்.

நோக்கிய நோக்கெனும் நுதிகொல் வேல்இணை

ஆக்கிய மதுகையான் தோளிள் ஆழ்ந்தன