பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 ஆரணிய காண்ட ஆய்வு

'கற்றையஞ் சடையவன் கண்ணின் காய்தலால் இற்றவன் அன்று தொட்டு இன்று காறுந்தான் கற்றவம் இயற்றி அவ் அருங்கன் நல்லுருப் பெற்றனனாம் எனப் பெயர்த்தும் எண்ணுவாள்” (13)

சடையவன்=சிவன். இற்றவன் = உடம்புஇற்றுப்போன் மன்மதன். அநங்கன்=உடம்பு இல்லாதவன் (மன்மதன்). ந+ அங்கன்=உடம்பு இல்லாதவன் இவன். சமசுகிருதப் புணர்ச்சி முறை. இந்தோ ஐரோப்பிய இன மொழிகளுள் சில அல்லது பலவற்றில் 'ந' என்பதற்கு இல்லை என்பது பொருள். இலத்தீனிலும் பிரஞ்சிலும் NON (நொ(ன்) என்பர். ஆங்கிலத்தில் No (நோ-ந) என்பர். வடமொழியிலும் இந்தியிலும் 'ந' என்பர். ந என்பதன் பக்கத்தில் (அநங்கன்) ந+ அங்கன் என உயிர் முதல் வரு மொழிவரின், ந என்பது (ந்+அ) அந்’ என்றாகும். பின் அந்+அங்கன் = அநங்கன் என்றாகிறது. எனவே, அனங்கன் என்று சிலர் எழுதுவது பொருந்தாது. அநங்கன் என்று கம்பரைப் போல் எழுதுவதே திருத்தமானது.

மேலும் எண்ணுகிறான். இவனுடைய இரண்டு தோள் களையும் ஒரே நேரத்தில் பார்க்க முடியவில்லை. அது போலவே, இவனது மார்பின் பரப்பையும் ஒரே நேரத்தில் காண முடியவில்லை. அவ்வாறு காண்பதற்குக் கண்கள் போதவில்லை. அந்த அளவுக்கு இரண்டு தோள்களின் இடைவெளியும் மார்பின் பரப்பும் விரிந்துள்ளனவாம்:

"தோளொடு தோள் செலத் தொடர்ந்து நோக்குறின்

ளிேய அல்ல கண், நெடிய மார்பு என்பாள்" (16)

காவல் துறைக்கும் போர்த் துறைக்கும் ஆள் எடுக்குங்கால் மார்பு இவ்வளவு பரப்பு இருக்க வேண்டும் என ஒரு விதி வைத்துள்ளமை ஈண்டு எண்ணத் தக்கது. உயர்ந்த உடல் இலக்கணம் உடைய ஆடவர்க்குச் சிங்கம் போல் பரந்த மார்பும் ஒடுங்கிய வயிறும் இருக்கும். இதற்கு