பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/109

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சுந்தர சண்முகனார் 0 107

எதிர்மாறாகச் சிலர்க்கு மார்பை விட வயிறுதான் மிக்க பரப்பளவு சுற்றதளவு உடையதாக உள்ளது. இவர்கள் சாப்பாட்டு ராமன்கள். தயரத ராமனுக்கோ மார்பு மிகவும் பரந்தது.

தவம் செய்த தவம்

இவ்வளவு பேரழகு உடைய இளைய ஆண் மகன் தவக் கோலத்தில் இருப்பது எற்றுக்கோ! இவன் தவம் செய்வதற்கு அந்தத் தவம் என்பது எவ்வளவோ தவம் செய்திருக்க வேண்டும் - என்கிறாள்:

'கவம் செயத் தகைய இந் நளின நாட்டத்தான்

தவம் செயத் தவம் செய்த தவம் என் என்கின்றாள்'

(18)

வற்களையின் நோன்பு

இவனது இடுப்பில் உடுக்கப்பட மரவுரி செய்துள்ள தவத்தைப் பொன்னாடை செய்யவில்லை போலும் என்றாள்.

'வற்கலை நோற்றன மாசிலா மணிப்

பொற்கலை நோற்றில போலுமால் என்பாள்” (22)

இங்கே கவுதமப் புத்தரின் வரலாற்றுச் செய்தி ஒன்று நினைவைத் தூண்டுகிறது. புத்தர் தம் மனைவியையும் இராகுலன் என்னும் சிறு குழந்தையையும் விட்டு நீங்கித் துறவு பூண்டார். ஒரு நாள், பிம்பி சார மன்னன் வேள்வியில் போட்டு அவித்து உண்பதற்காக ஏராளமான ஆடுகள் ஒட்டிச் செல்லப்பட்டனவாம். ஆட்டு மந்தையின் கடைசி யிலே ஒரு நொண்டிக் குட்டி ஆடு காலை நொண்டி நொண்டி வருந்தியபடியே சென்றதாம். அதன் தாய் ஆடு அதைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே போயிற்றாம். . - ・ = < - ・ ・ ・ ー