பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/112

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


110 0 ஆரணிய காண்ட ஆய்வு

“பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்து வைத்துக் கேடு கெட்டவர்கள்’ என்று இவர்களைச் சாடுகிறார் ஒளவையார். .

தானும் துய்க்காமல் பிறர்க்கும் கொடாமல் பொருளைக் காத்து வைத்தவனை நோக்கி அப்பொருளே எள்ளி நகையாடுமாம்; அருள் என்னும் பண்பும் அங்ஙனமே செய்யுமாம் - என்று நாலடியார் நவில்கிறது.

'துய்த்துக் கழியான் துறவோர்க்கு ஒன்றுஈகான்

வைத்துக் கழியும் மடவோனை - வைத்த பொருளும் அவனை நகுமே உலகத்து அருளும் அவனை நகும்” (273) என்பது பாடல். இப்படியான ஒரு கருத்தைக் கம்பர் வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல் தம் பாடலில் புகுத்தியுள்ளார். தோள் கண்டாள்

சூர்ப்பணகை இராமனுடைய தோள்களில் தன் கண்களைப் பதித்தாளாம்; பிற்பாடு அந்தக் கண்களை

அவனுடைய தோள்களிலிருந்து பெயர்த்து எடுக்க முடிய

வில்லையாம்.

தோன்றல் தன் சுடர்மணித் தோளில் காட்டங்கள்

ஊன்றினள் பறிக்க ஊர் ஊற்றம் பெற்றிலள் (27) நாட்டங்கள் = கண்கள். பறித்தல் = பெயர்த்து மீட்டல். ஊற்றம் = வலிமை. பார்த்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருந்தார்கள் என்று உலகியலில் சொல்கிறார்களே - அது இதுதான்.

தோள் கண்டார் தோளே கண்டார்’ எனும்படி, மிதிலையில் இராமனைக் கண்ட மடந்தையரின் நிலை இங்கே ஒத்து எண்ணத் தக்கது.