பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/114

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


112 ஆரணிய காண்ட ஆய்வு

வெளித் தோற்றம்தான் இப்படி, ஆனால் உள்ளம் நஞ்சாக இருந்ததாம். வஞ்சகர்கள் வெளித் தோற்றத்திற்கு மாறுகோலம் கொள்ளலாம்; ஆனால் உள்ளத்தின் வஞ்சத்தை மாற்ற முடியா தாதலின் வஞ்ச மகள்' எனப்பட்டாள்.

இந்தப் பாடலின் மெல்லோசை நயத்தைத் திரும்பத் திரும்பப் படித்துப் பார்த்தும் பாடிப் பார்த்தும் சுவைக்க வேண்டும்.

வன்மை இயல்புடைய அரக்கி, இராமனை மயக்கக் கொண்டுள்ள மென்மைத் தோற்றத்திற்கு ஏற்ற மெல்லோசை வண்ணத்தில் இந்தப் பாடல் அமைந்துள்ளது. உயர்ந்த பாவாணர்களின் பாடல்கள், அவரை அறியாமலேயே கருத்துக்கு ஏற்ற நடையில் அமைந்து விடும். இந்தப் பொருத்தமான அமைப்பைக் கம்பன் பாடல்களில் பல இடங்களில் காணலாம். எனவே, இந்தப் l f sT t — Gð) (SU இன்னொரு முறை உரக்கப் பாடிப் பார்ப்போம்.

"பஞ்சிஒளிர் விஞ்சுகுளிர் பல்லவம் அனுங்கச்

செஞ்செவிய கஞ்சகிமிர் சீறடிய ளாகி அஞ்சொல்இள மஞ்ஞையென அன்னமென மின்னும் வஞ்சியென நஞ்சமென வஞ்சமகள் வந்தாள்"

இந்தப் பாடலைப் பாடும்போதே, கட்புலனால் அறிய முடியாத அவளது மென்மையான வஞ்சகத் தோற்றத்தை செவிப் புலனால் அறிய முடிகிறது. எங்கே - இன்னொரு முறையும் பாடிப் பார்ப்போம்:

"பஞ்சிஒளிர் விஞ்சுகுளிர் பல்லவம் அனுங்கச்

செஞ்செவிய கஞ்சகிமிர் சீறடிய ளாகி அஞ்சொல்இள மஞ்ஞையென அன்னமென மின்னும் வஞ்சியென நஞ்சமென வஞ்சமகள் வந்தாள்'