பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/115

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சுந்தர சண்முகனார் ( 113

இராமனது வியப்பு

பேரழகு பொருந்திய பெண்ணாக வான்வழியாக வந்த சூர்ப்பணகையைக் கண்ட இராமன் வியப்புற்றான். இந்தப் பெண் நாகர் உலகிலிருந்தா அல்லது விண்ணுலகத்திலிருந்தா அல்லது இம்மண்ணுலகத்திலிருந்தா - வேறு எவ்வுலகத்தி லிருந்து வந்திருப்பாள்! பேரழகிற்கு ஓர் எல்லையில்லையா! பேரழகின் உயர் எல்லைக் கோட்டில் உள்ள இந்த அழகி யாரோ! இவளுக்கு ஒப்பில்லை.

பேர்உழைய நாகர் உலகின், பிறிது வானின்,

பார் உழையின் இல்லது ஒரு மெல்லுருவு பாரா ஆர்.உழை அடங்கும் அழகிற்கு அவதி உண்டோ நேரிழையர் யாவர் இவர்நேர் என கினைந்தான்” (36)

அவதி = எல்லை. நேரிழையர் - மடந்தையர். சூர்ப்பணகையின் மாறுகோலத் தோற்றப் பொலிவு இராமனையே கூட மயக்கி விட்டது.

மணிமேகலை தெரு வழியே செல்லின், அவளை ஏறிட்டுப் பார்க்காத ஆடவர் பேடியராகத்தான் இருக்க வேண்டும் என்னும் பொருளில்,

பேடியர் அன்றோ பெற்றியின் கின்றிடின்'

என்று தோழி சுதமதி கூறியதாக மணிமேகலைக் காப்பியத்தில் கூறப்பட்டுள்ளது. ஒர் ஆண் மற்றோர் ஆணையும், ஒரு பெண் மற்றொரு பெண்ணையும் தீய எண்ணம் இன்றிப் பார்ப்பது போல, ஒர் ஆண் ஒரு பெண்ணைத் தீய எண்ணம் இன்றி ஏறெடுத்துப் பார்க்கலாம் அல்லவா? தீய எண்ணத்துடன் நோக்கலாம் எனச் சுதமதி கூறியதாகக் கொள்ளலாம் எனினும், இங்கே இராமனது பார்வை காமப் பார்வை யன்று - வியப்புப் பார்வையாம்.