பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 0 115

'வீசி என்பது பார்வையின் விரைவையும் ஆழத்தையும் தீமையையும் அறிவிக்கிறது.

இராமனது வரவேற்பு

வந்தவளை இராமன் நோக்கி, உன் வரவு தீமையில்லாத வரவு ஆகுக. செம்மைப் பண்பு உடைய திருவே! நீ இங்கே வந்தது எங்களது நல்வினையின் பயனே யாகும். உன் ஊர் எது? பேர் எது? உன் உறவினர் யாவர் என வினவினான்’’.

"தீதில் வரவாக திரு நின்வரவு சேயோய்

போத உளது எம்முழையோர் புண்ணியமது அன்றோ ஏதுபதி ஏதுபெயர் யாவர் உறவு என்றான் வேதமுதல் பேதை அவள் தன்நிலை விரிப்பாள் (38) வேத முதல் = இராமன். பேதை = சூர்ப்பனகை. உலகில் வரவேற்கும் போது நல்வரவாகுக என்று கூறுவது வழக்கம். இங்கே, அதற்கு எதிர்மாறாக, தீமை இல்லாத வரவு ஆகுக' என்றான். ஏனெனில், இவள் தீய நோக்குடன் வந்திருப்பதை முன்கூட்டி அறிந்துள்ளமையால் - என்க.

பின்னால் உள்ளதற்கு ஏற்ப முன்னால் செய்திகளை இவ்வாறு அமைப்பது கம்பருக்குக் கைவந்த கலை. கேகய நாட்டில் உள்ள பரதனை அழைத்து வரும்படி ஏவப்பட்ட தூதுவன் பரதனை அடைந்தபோது, இங்கே அயோத்தியில் தயரதன் இறந்து விட்டான். இது தூதுவனுக்கும் தெரியாது - பரதனுக்கும் தெரியாது. ஆயினும், வந்த தூதுவனை நோக்கிப் பரதன் தன் தந்தை தயரதனின் நலனை உசாவுகிறான்.

அப்பா நலமா இருக்கிறாரா என்று வினவுவது உலகியல். அப்பா எந்தத் தீமையும் இல்லாமல் இருக்கிறாரா என்று கேட்பது வழக்கம் இல்லை. ஆனால், தந்தை தீது இல்லாமல்