பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/118

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


16 ஆரணிய காண்ட ஆய்வு

உள்ளாரா என்று பரதன் வினவியதாகக் கம்பர் பாடலை அமைத்துள்ளார்.

"தீது இலன்கொல் திருமுடியோன் என்றான்”

என்பது பாடல் பகுதி, திருமுடியோன் என்றது தயரதனை. தந்தை தீமை அடைந்துள்ளான் - அதிலும் பெரிய இறுதிச் சாவுத் தீமை அடைந்துள்ளான் - இதைப் பின்னால் பரதன் தெரிந்து கொள்ளப் போகிறான். ஆனால் கேட்டதோ தீதிலன் கொல்’ என்பது.

'கொல் என்பது ஐயப் பொருளிலும் பொருளற்ற

வெற்று அசைநிலையாகவும் வரும்.

'கொல்லே ஐயம் அசை நிலைக் கூற்றே’ (16)

என்பது நன்னூல் இடையியல் நூற்பா இங்கே, "தீதிலன் கொல்' என்பதிலுள்ள 'கொல்’ என்பதை மேலோடு பார்க்கின் அசைநிலையாய்த் தோன்றும்; ஆழ்ந்து பார்க்கின் ஐயப் பொருள் அதில் மறைந்திருப்பது தெரியும். இப்போது தயரதன் இன்மையால் ஐயத்திற்கு இடம் வைத்துக் கம்பர் பாடியுள்ளார்.

தந்தை என்று குறிப்பிடாமல் திருமுடியோன்’ என்றான். இப்போது தயரதன் முடியிழந்த தல்லாமல் இறந்தே விட்டான். இத்தகைய சொல் நயம் பொருள் நயங்களைச் சுவைக்கக் கம்பனிடம் வரவேண்டும்.

இது மிகவும் சுவையான பகுதியாகும். சுவைக்கு மேல் சுவையாக அடுத்து மற்றொன்று உள்ளது. அதாவது: நீங்கள் வருவதற்கு யாங்கள் என்ன புண்ணியம் செய்தோமோ - யாங்கள் செய்த புண்ணியப் பயனே உங்கள் வருகை என்று இராமன் கூறியது, குத்தலும் கிண்டலும் உடையது. இது புகழ்வது போலப் பழிக்கும் வஞ்சகப் புகழ்ச்சி அணியாகும்.