பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/12

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


10 0 ஆரணிய காண்ட ஆய்வு

என்று கூறியுள்ளார். கவிராயர் பந்தி என்றார் - அருணகிரி நாதர் பத்தி என்றார். இரண்டும் ஒன்றே. சீதையின் பற்கள் இத்தகையனவாம்.

சிலைக்குமரர் = வில் ஏந்திய இராம இலக்குவர். இவர்கள் இருந்த இடம் பழுமரப் பொழில்கள் சூழ்ந்ததாம். பழுவம் = காடு.

'பயன்மரம் உள்ளுர்ப் பழுத்தற்றால் செல்வம்

நயனுடை யான்கண் படின்” (216) என்னும் குறளால் பழுமரங்களின் பயன் அறிய வரும்.

தமரெலாம் வரல்

மூவரும் அத்திரி முனிவரின் அருகு அடைந்தனர். உறவினர் அனைவரும் வரின் ஒருவர்க்கு எவ்வளவு மகிழ்ச்சி உண்டாகுமோ - அவ்வளவு மகிழ்ச்சி அடைந்த அத்திரி, அவர்களை நோக்கி, நீங்கள் இவண் அடைந்தது எளிய செய்தியா? தேவர்கள் அனைவரும் மற்றும் எல்லா உலகத்தவரும் வந்தது போன்ற பெருமைக்கு உரிய அரிய செய்தியல்லவா? எம்மனோருள் யார் செய்த தவத்தாலோ நீங்கள் வந்துள்ளீர்கள் - என உள்ளம் உருகி வரவேற்றார்.

'குமரர் நீர் இவண் அடைந்துதவு கொள்கை எளிதோ

அமரர் யாவரொடும் எவ்வுலகும் வந்த அளவோ எமரின் யார்தவம் முயன்றனர்கள் என்று உருகினன் தமரெலாம் வர உவந்தனைய தன்மை முனிவன்” (3)

உறவினர் ஒருவர் வந்தாலேயே சில வீடுகளில் கசப்பு அடைவர்; அவர் இன்னொருவரையும் உடன் அழைத்துவரின் நிலைமை என்னாம். அன்றியும் உறவினர் அனைவரும் வரின் என்னாகும். உறவினர் அனைவரும் வர மகிழ்ச்சி யடைவது திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் உண்டு.